ads
மாதத்திற்கு 45GB வழங்கும் பிஎஸ்என்எல்லின் புதிய பிளான்
வேலுசாமி (Author) Published Date : May 23, 2018 14:36 ISTBusiness News
இந்தியாவின் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல், இன்டர்நெட் டேட்டாவுக்காக பயனாளர்களுக்கு 53ரூ மற்றும் 92ரூ என்ற புதிய பிளானில் 3GB மற்றும் 6GB என இன்டர்நெட் டேட்டாவை வழங்கி வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது 499ரூபாய் என்ற கட்டணத்தில் பயனாளர்களுக்கு 45GB வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்புகளும் இத்துடன் சிறப்பு சேவையாக வழங்கப்படுகிறது.
பிஎஸ்என்எல் போன்ற முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் 509 என்ற கட்டணத்தில் நாளொன்றுக்கு 2GB வீதம் 60GB அளவிலான டேட்டாவை வழங்கி வருகிறது. இது தவிர பாரதி ஏர்டெல்லும் சமீபத்தில் போஸ்ட்பெய்டு 499 பிளானை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏர்டெல்லின் இந்த திட்டத்தில் மாதத்திற்கு 40GB டேட்டா, வரம்பற்ற அழைப்புகள் தவிர ஒரு மாதத்திற்கு அமேசான் ப்ரைம் உள்ளிட்டவையும் வழங்கி வருகிறது.
இதர தொலைத்தொடர்பு நிறுவனங்களான வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்களும் தனது வாடிக்கையாளர்களுக்கு 40GB அளவிலான டேட்டாவை ஒரு மாதத்திற்கு வழங்கி வருகிறது. ஆனால் மத்திய அரசின் சொந்த நிறுவனமான பிஎஸ்என்எல் அறிவித்துள்ள இந்த திட்டத்தில் இன்டர்நெட் டேட்டாவுடன் சேர்த்து வாய்ஸ் கால் மற்றும் 100எஸ்எம்எஸ் உள்ளிட்டவையும் வழங்குகிறது.