ads

115 நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் ஜிஎஸ்டி வரி சிக்கலான வரிமுறை

உலகிலேயே இந்தியாவின் ஜிஎஸ்டி வரிமுறை தான் சிக்கலானது என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.

உலகிலேயே இந்தியாவின் ஜிஎஸ்டி வரிமுறை தான் சிக்கலானது என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.

ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி நாடு முழுவதும் கடந்த ஜூலை 1-ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. 5,12,18,28 போன்ற சதவீத அடிப்படையில் இந்த ஜிஎஸ்டி வரி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஜிஎஸ்டி வரியால் சாமானிய மக்களின் அடிப்படை தேவை பொருள்களில் இருந்து மாபெரும் தொழிலதிபர்களின் சொகுசு கார் வரை முழுவதும் உள்ள பொருட்களின் விலை கடுமையாக ஏறியது.

இதனை எதிர்த்து நாடு முழுவதும் குரல் கொடுக்க அடுத்தடுத்த ஜிஎஸ்டி வரியின் அவசர கூட்டத்தில் ஜிஎஸ்டி வரியில் தற்போது மாற்றம் செய்யப்பட்டு புழக்கத்தில் உள்ளது. இந்நிலையில் தற்போது உலக வங்கி, உலகின் ஜிஎஸ்டி வரிகளில் மிகவும் சிக்கலான வரி இந்தியாவின் ஜிஎஸ்டி என்று தெரிவித்துள்ளது.

இது குறித்து உலக வங்கி வெளியிட்ட அறிக்கையில் "ஜிஎஸ்டி வரியை உலகில் 115 நாடுகள் பின்பற்றி வருகிறது. இந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் ஜிஎஸ்டி வரியின் கட்டமைப்பும், வரிவிகிதமும் மிகவும் சிக்கலான ஒன்றாக உள்ளது. 28 சதவீதம் வரி என்பது உலகில் அதிகபட்ச வரம்பாக உள்ளது. இந்த ஜிஎஸ்டி வரியில் ஜீரோ சதவீத வரி எளிமையாக்குகிறது. இந்த ஜிஎஸ்டி வரியில் மாற்றம் கொண்டு வந்தால் நாட்டில் பொருளாதாரத்தில் மந்த நிலை உருவாகும்." என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

115 நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் ஜிஎஸ்டி வரி சிக்கலான வரிமுறை