ads

சென்னையில் கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி சார்பில் நடைபெறவுள்ள மாணவர்களுக்கான கருத்தரங்கம்

சென்னையில் மாணவர்களுக்கு ஐஏஎஸ் தேர்வை எப்படி எதிர்கொள்வது குறித்து மாபெரும் கருத்தரங்கம் நடைபெற உள்ளது.

சென்னையில் மாணவர்களுக்கு ஐஏஎஸ் தேர்வை எப்படி எதிர்கொள்வது குறித்து மாபெரும் கருத்தரங்கம் நடைபெற உள்ளது.

ஆங்கில பத்திரிகை மூலமாக சிறந்த சிவில் சர்விஸ் போட்டி தேர்வு நிறுவனமாக கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி இயக்குனர் சத்யஸ்ரீ பூமிநாதன் கூறுகையில் "கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி சார்பில் ஐஏஎஸ் தேர்வை எதிர்கொள்வது குறித்து நடத்தப்பட்ட 'உனக்குள் ஓர் ஐஏஎஸ்' நிகழ்ச்சியின் மூலம் தமிழகத்தில் லட்சக்கணக்கான மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் பலதரப்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு ஆதரவு அளித்தனர்.

இதன் பிறகு இந்த ஆண்டும் வரும் ஏப்ரல் 26-ஆம் தேதி ஞாயிற்று கிழமை சென்னை, எழும்பூரில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் காலை 9 மணி முதல் 1 மணிவரை மாபெரும் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் சிறப்புரையாற்ற சிறப்பு விருந்தினர்களாக இறையன்பு IAS, பிரகாஷ் IAS மற்றும் நந்தகுமார் IAS ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இந்த நிகழ்ச்சிக்கு மாணவர்களிடையே அதிகப்படியான வரவேற்பு இருக்கிறது. கிங்மேக்கர்ஸ் IAS அகாடமி தற்போது வரையில் 104 IAS அதிகாரிகளை உருவாக்கி இந்திய அளவில் சாதனை படைத்துள்ளது. தமிழக அளவில் முதலிடம் பிடித்த பிரசாத் IAS, இந்தியாவிலே முதல் பார்வையற்ற பெண்மணி பெனோ செபின் IFS, மணிகண்டன் IAS போன்ற IAS அதிகாரிகளை உருவாக்கி சாதனை படைத்துள்ளது.

இந்த ஆண்டும் 100க்கும் அதிகமான ஐஏஎஸ் நேர்முக தேர்வுக்கு அனுப்பி வைத்துள்ளது. மேலும் இந்த கருத்தரங்கிற்கு கலந்து கொள்ள மாணவர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் ஆராவமுள்ள மாணவர்கள் முன்பதிவு செய்திருப்பது அவசியம்." என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியை காணும் விருப்பமுள்ள மாணவர்கள்  94442 27273 என்ற நம்பருக்கு அனுப்பி முன்பதிவு செய்து கொள்ளவும்.

சென்னையில் கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி சார்பில் நடைபெறவுள்ள மாணவர்களுக்கான கருத்தரங்கம்