ads
ஒன்னாம் வகுப்பு சேர்க்கைக்காக ஒரு லட்சம் வாங்கிய பள்ளி முதல்வர் கைது
வேலுசாமி (Author) Published Date : Apr 10, 2018 12:24 ISTEducation News
தமிழகத்தில் மாணவர்கள் சேர்க்கைக்கான பெற்றோர்கள் பெரிதும் போராட வேண்டியுள்ளது. சாதாரணமாக எல்கெஜி, யுகேஜி போன்ற படிப்புகளுக்கு தனியார் பள்ளிகளில் ஒரு லட்சத்திற்கும் மேலாக பணம் செலுத்த வேண்டியுள்ளது. இது தவிர ஆண்டு முழுவதும் ஆண்டு முழுவதும் சீருடை, புத்தகம், பள்ளி விழாக்கள் போன்ற இதர செலவுகளுக்காகவும் தனியாக பணம் செலுத்த வேண்டியுள்ளது.
இது பள்ளிகளில் மட்டுமல்லாமல் தனியார் கல்லூரிகளிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஒரு பாதியளவில் கட்டப்பட்ட பள்ளி, கல்லூரியை தொடங்கி அதனை மேம்படுத்தவும், கோடி கோடியாக கொள்ளையடிக்கவும் பள்ளி கல்லூரிகளை தொடங்குகின்றனர். ஏராளமான கனவுகளோடு மாணவர்கள் பள்ளி கல்லூரிகளில் நுழையும் போது தரமற்ற கட்டிடங்களாலும், தரமற்ற பராமரிப்பு பணிகளாலும் ஏமாற்றம் அடைகின்றனர்.
பணத்தை திரும்ப பெற முடியாமல் வேறு வழியின்றி மாணவர்கள் பள்ளி கல்லூரிகளில் பயின்று வருகின்றனர். இந்த அவலங்கள் தொடர்ந்து அனைத்து பகுதிகளிலும் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் தற்போது சென்னை அசோக் நகரில் 1-ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான ஒரு லட்சம் கேட்ட கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.