ads

நாம் சாப்பிட்ட பின்பு செய்யக்கூடாதவை

after-eating-dont-do-this

after-eating-dont-do-this

நிறைய பேருக்கு சாப்புறது ரொம்ப பிடித்த விஷயமா இருக்கும். அதிலும் சில பேர் சாப்பிட்டபிறகு இன்னும் சில உணவுகளை சேர்த்து சாப்பிடுவாங்க. அப்படி சாப்பிடுறது ஒரு பழக்கமாவே வச்சிக்குவாங்க. அந்த மாதிரி  சாப்பிடுவதால் நம் உடலில் பல பாதிப்புகளை உண்டாக்கும். அப்படி நம் சாப்பிட்ட பிறகு சாப்பிடுகிற ஒரு சில உணவுகள் எந்த மாதிரியான பிரச்சனைகளை உண்டாக்கும் என்பதை பற்றி நம் இப்பொழுது பார்க்கலாம்.       

சாப்பிட்ட பிறகு டீ குடிக்கிற பழக்கம் இன்னும் சில பேருக்கு இருக்கு. அப்படி டீ குடிச்சா நம் சாப்பிடுகிற சாப்பாடு செரிமானம் ஆகும் என்று நினைத்து கொண்டிருக்கிறார்கள். அப்படி டீ குடிச்சா அஜீரண கோளாறு ஏற்படுத்தும். இனிமேல் சாப்பிட்ட பிறகு டீ குடிக்கிற பழக்கத்தை தொடர வேண்டாம்.

சாப்பிடும் போது ஜூஸ் குடிக்கிற பளக்கும் ஒரு சிலருக்கு இருக்கு, இது ரொம்ப மோசமான செயல் என்று சொல்லலாம். அப்படி செய்யும் போது உங்க உணவில் இருக்கும் ப்ரோட்டீன், கார்போஹைட்ரேட், கொழுப்பு இது எல்லாம் செரிக்க வைப்பதற்கு உதவும் நொதிகள் தடுக்கப்படும். அப்படி ஜூஸ் குடிக்கணும் என்று தோன்றினால் சாப்பிடுவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பு குடித்து கொள்ளலாம்.

 சில நபர்கள் தயிருடன் சேர்த்து வறுத்த உணவுகளை சாப்பிடுவாங்க, இந்த காமினேஷன் என்னவோ நல்ல தான் இருக்கும். ஆனா இது உங்க உடலில் இருக்கிற கொழுப்புகளை உடைக்கும் திறனை குறைத்து கொழுப்புக்களின் அளவை அதிகப்படுத்திவிடும். அதன் பிறகு என்ன ஆகும் உடல் எடை அதிகரித்து உடல் பயிற்சி மையத்திற்கு செல்லவேண்டிய அவசியம் ஏற்படும்.     

அதிக நபர்கள் ஜங் புட் அதிகமாக விரும்பி சாப்பிடுவாங்க.  ஜங் புட் என்றால்நாம் நாகரிகம் என்ற பெயரில் பீட்ஸா, பர்கர் இதன் கூட கோக் இல்லை என்றால் பெப்சி போன்றவை சேர்த்து சாப்பிடுவார்கள். இது போன்று சாப்பிடுவதினால் நம் உடலில் இருக்கும் இரத்த சக்கரையின் அளவும், கொழுப்புக்களின் அளவும் அதிகரிக்கும்.

எந்த விசேஷமாக இருந்தாலும் இனிப்பு பலகாரத்துடன் துவங்குவது நமக்கு எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான், அந்த அளவுக்கு இனிப்புகளுக்கு முக்கியத்தும் கொடுப்போம். இதில் சில நபர் சாப்பிட்ட பிறகு இனிப்புகளை சாப்பிடுவாங்க. அப்படி சாப்பிடுவதின் மூலம் உங்க உடலில் இருக்கும் கொழுப்புக்களின் செரிமான திறனை குறைத்து உடல் எடையை அதிகரிக்கும்.

ஞாயிற்று கிழமை என்றாலே பெரும்மபாலான வீடுகளில் அசைவம் உணவாக தான் இருக்கும். இதில் சில பேர் மட்டன் உடன் உருளைக்கிழங்கை சேர்த்து சமைத்து சாப்பிடுவாங்க. இப்படி ப்ரோட்டின் உடன் கார்போஹைட்ரேட்டுகளை சமைத்து சாப்பிடும் போது வயிற்றில் செரிமான அமிலம் அளவுக்கு அதிகமாக சுரக்கும். மேலும் அசிடிட்டி உண்டாக்குவதற்கு அதிகளவு வாய்ப்புகள் ஏற்படுத்திவிடும்.    

           

நாம் சாப்பிட்ட பின்பு செய்யக்கூடாதவை