ads
கடைகளில் கிடைக்கும் பழங்களில் தரமான வேதிப்பொருள் அல்லாத பழங்களை தேர்ந்தெடுப்பது எப்படி
வேலுசாமி (Author) Published Date : Mar 19, 2018 18:32 ISTHealth News
மக்கள் அன்றாடம் உண்ணும் உணவுகளில் பழவகைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. மக்கள் உண்ணும் உணவு பழக்கங்கள் கலாச்சாரத்திற்கு தகுந்தவாறு ஒவ்வொரு நாட்டிலும் மாறி அமைகிறது. ஒரு மனிதர் கடைபிடிக்கும் உணவு பழக்கங்கள் மூலமாக அவரது வாழ்க்கையும், ஆயுட் காலமும் சிறப்பானதாக அமைகிறது. ஒருவரின் உணவு பழக்கங்கள் முறையின்றி இருந்தால் அவரின் வாழ்க்கை நோயுற்று மருத்துவமனையே கதி என்ற நிலைக்கு தள்ளப்படுகிறார்.
இதனால் உணவு பழக்கங்களை ஒரு மனிதன் முறையாக பராமரித்து கொள்ள வேண்டும். இந்த உணவு பழக்கங்களில் பழ வகைகள், கீரை வகைகள், பருப்பு வகைகள் போன்றவை இன்றியமையாதது. இதில் ஒவ்வொரு பழ வகைகளுக்கும் அவற்றின் தேவைக்கேற்றவாறு அதனை உண்ண வேண்டும். பழ வகைகளை காலை எழுந்தவுடன் தண்ணீர் பருகிய பிறகு உண்ண வேண்டும் ஆனால் அதனை காலை உணவை முடித்த பிறகு உண்பது அஜீரண கோளாறுகளை ஏற்படுத்தும்.
சர்க்கரை நோயாளிகள் சாப்பிடுவதற்கு 1-2 மணிநேரத்திற்கு முன்பு பழ வகைகளை எடுத்துக்கொள்ளுமாறு மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். மக்கள் அதிகமாக விரும்பி சாப்பிடக்கூடியவையாக ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை, வாழைப்பழம், திராட்சை, மாம்பழம், தர்பூசணி போன்ற பழங்கள் எளிதில் கிடைக்கிறது. ஆனால் வெளியில் விற்பனைக்காக விற்கும் பழங்கள் அனைத்தும் நன்மை தரக்கூடிய பழங்களாக நிச்சயம் இருக்காது. மக்கள் பழ வகைகளை வாங்கும் போது தெரிந்தவர்கள் என்று அதனை வாங்காமல் அதன் பராமரிப்பை அறிந்து வாங்க வேண்டும்.
முன்னதாக தர்பூசணி பழத்தின் நன்மையையும் அதில் கலக்கப்படும் வேதி பொருள் பற்றியும் தெரிவித்துள்ளோம். தற்போது வாழைப்பழத்தின் நன்மைகளையும், பழம் பழுக்க என்ன செய்கிறார்கள் என்பதை பார்ப்போம்.
வாழைப்பழத்தின் நன்மைகள் :1. வாழைப்பழம் ஆப்பிளை விட பலமடங்கு சிறந்ததாக கருதப்படுகிறது. 2.வாழைப்பழத்தில் உள்ள இரும்பு சத்து மற்றும் வைட்டமின் A அளவு ஆப்பிளை விட ஐந்து மடங்கு அதிகமாக உள்ளது. ஒரு சராசரி வாழைப்பழத்தில் கார்போஹைட்ரேட் 20கிராம், சர்க்கரை 12கிராம், 2.6கிராம் நார்சத்து, ஒரு கிராம் கொழுப்பு, 9மி.கிராம் வைட்டமின் சி போன்றவை உள்ளது.3. வாழைப்பழங்கள் உண்பதால் புத்துணர்ச்சி அளித்து நரம்புகளுக்கு வலு சேர்க்கிறது.மன இறுக்கத்தால் பாதிப்படைந்தோர் வாழைப்பழத்தை உண்பதால் அவர்கள் இருக்கும் இறுக்க நிலையில் இருந்து மீள வழிவகை செய்கிறது. இதனை மருத்துவர்கள், மருத்துவ ரீதியாக உறுதி செய்துள்ளனர்.4. ரத்த கொதிப்பு அதிகமாவதால் உடலுக்கு பல்வேறு பிரச்சனைகளை உண்டாக்கி மோசமான உடல் பாதிப்புகளை உருவாக்குகிறது. வாழைப்பழத்தில் உள்ள உப்பின் அளவு மற்றும் பொட்டாசியம் குறைந்த தன்மை சீரான ரத்த ஓட்டத்தை பராமரிக்கிறது. 5. பெரும்பாலான மக்களுக்கு பூச்சுகள் மற்றும் கொசு கடியின் காரணமாக தோலில் தடிப்புகள் ஏற்படுகிறது. இதன் பகுதிகளில் வாழைப்பழ தோலின் உட்புற பகுதியை தேய்த்தால் வீக்கம் மற்றும் நமைச்சல் போன்றவை குணமாகிறது. மேலும் தலை சுற்றலுக்கு வாழைப்பழம், தேன் மற்றும் பால் கலந்த ஜூஸ் பெரிதும் உதவுகிறது.6. புகைபிடிக்கும் பழக்கம் இருப்பவர்கள், இத்தகைய தீய பழக்கங்களை குடும்ப நலன் கருதி விட்டுவிடுதல் நல்லது. இவ்வாறு புகைபிடிக்கும் போது உடலில் நிக்கோடின் என்ற நச்சுப்பொருள் கலந்து விடும். வாழைப்பழத்தின் இருக்கும் வைட்டமின், பொட்டாசியம் போன்ற சத்து பொருட்கள் இந்த நிக்கோடின் என்ற நச்சு பொருளை சிறிது சிறிதாக அகற்றி விடும்.
வாழைப்பழம் பழுக்க என்ன செய்கிறார்கள்?கடைகளுக்கு சென்று பழ வகைகளை வாங்கும் போது ஒவ்வொரு பழங்களும் கண்கவர் வண்ணத்தில் அழகுடன் இருக்கும். "அழகு இருக்கும் இடத்தில் தான் ஆபத்து இருக்கும்" என்று ஒரு பழமொழி உண்டு. அது இதுபோன்ற பழவகைகளுக்கும் பொருந்தும். இந்த அழகு எப்படி உருவானது என்று பார்த்தால் நமக்கே அழகின் மீது வெறுப்பு வரும்.
இயற்கையுடன் யாரும் போட்டி போட முடியாது. ஆனால் செயற்கையாக உருவாக்கப்பட்ட பழங்கள் இயற்கையை விட அழகாக இருந்தாலும் அதில் இருக்கும் சுவை பலமடங்கு குறைவு. செயற்கையாக வாழைப்பழங்களை பழுக்க வைக்க எத்திலீன் வாயு பெரும்பாலான இடங்களில் உபயோகப்படுத்த படுகிறது. எத்திலீன் வாயு மனிதர்களுக்கு உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தாது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பெரும்பாலான இடங்களில் வாழைப்பழத்தை பழுக்க வைக்க "எதேபோன் (Ethepon)" என்ற பொருளை பயன்படுத்துகின்றனர். இதனை வாழைப்பழத்தில் உபயோகப்படுத்தும் போது அது வேகமாக பழுக்கிறது. ஆனால் அதன் நறுமணமும், சுவையும் குறைகிறது. இத்தகைய பழங்கள் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்காமல் இருந்தாலும் இதில் ஊட்டச்சத்து என்பது ஒன்று கிடையாது.
பிறகு எதற்காக இத்தகைய வேதிப்பொருளை கலப்படம் செய்கிறார்கள் என்று பார்த்தால், இயற்கை தாவரங்கள் மற்றும் பழ வகைகளில் குளோரோபைல் (Chlorophyll) எனப்படும் ஒரு கலவை உள்ளது. இது இயற்கை தாவரங்களின் ஒளிசேர்க்கைக்கு பெரிதும் உதவுகிறது. குளோரோபைல் இருப்பதால் தான் தாவரங்கள் மற்றும் பழங்கள் பச்சை நிறத்துடன் காணப்படுகிறது. பழ வகைகளில் இருக்கும் குளோரோபைலின் அளவை குறைப்பதன் மூலமாக நிறம் மாறுபடுவதுடன் பழங்கள் சீக்கிரமாக பழுக்கிறது.
இதனை அடுத்து விற்பனையாளர்கள் வேகமாக பழங்கள் பழுக்க கால்சியம் கார்பைடு என்ற வேதிப்பொருளை பயன்படுத்துகின்றனர். கடைகளில் கால்சியம் கார்பைடு ஒரு கிலோ 30 ரூபாய்க்கு எளிதாக கிடைக்கிறது. இந்த ஒரு கிலோ கால்சியம் கார்பைடை வைத்து 10 டன் பழங்களுக்கு உபயோகப்படுத்தலாம். கடைகளில் கிடைக்கும் கால்சியம் கார்பைடில் பாஸ்பரஸ் மற்றும் ஆர்சனிக் ஹைட்ரைடு போன்ற துகள்கள் இருக்கும்.
இந்த வேதிப்பொருள்கள் மோசமான உடல்நல தீங்கை விளைவிக்கும். கார்பைடு கலந்த பழங்களை உண்பதால் அஜீரண கோளாறு ஏற்படுகிறது. இதனால் திசுக்கள் அரிக்கப்பட்டு குடல்களில் செயல்பாடுகளும் பாதிப்படைந்து இறுதியாக வயிற்றுபுண் அல்சரை உடலுக்குள் உருவாக்குகிறது. மேலும் இத்தகைய பழங்கள் நரம்பியல் அமைப்பை பாதிப்பது மட்டுமல்லாமல் மூளைக்கு செயல்படும் ஆக்சிஜன் அளவை குறைக்கிறது.
மூளைக்கு செல்லும் ஆக்சிஜன் குறைவதால் ஹைப்போக்ஸியா (Prolonged Hypoxia) எனப்படும் நோயை உண்டாக்கி தலைவலி, மயக்கம், தூக்கமின்மை, மனநிலை பாதிப்பு போன்றவை ஏற்பட காரணமாக அமைகிறது. இத்தகைய பழங்களை உண்பதால் முக்கியமாக கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோர் பாதிப்படைந்து இறுதியாக கருச்சிதைவு ஏற்படுகிறது.
மேலும் உணவு கலப்பட விதிமுறையின் படி (விதி-44 AA) பழங்களை பழுப்பதற்காக கார்பைடை கலப்பது சட்டவிரோத செயல், இதற்கு காரணமானோர் தனது வாழ்க்கையில் ஆறு மாத சிறை வாசத்தையும் உரிய அபராததையும் விதிக்க வேண்டும்.
கார்பைடு கலந்த பழங்களை எப்படி கண்டுபிடிப்பது?1. பழங்களில் கார்பைடு கலப்பதால் பழத்தின் நிறமானது ஒரே சீராக அமைகின்றது.
2. பொதுவாக வாழைப்பழங்களை இத்தகைய வேதிப்பொருளை கலப்பதால் அதன் தண்டு பகுதி பச்சை நிறத்திலும், பழ பகுதி மஞ்சள் நிறத்திலும் காணப்படும். வேதிப்பொருள் அல்லாத வாழைப்பழத்தில் தண்டு பகுதியில் கருமை நிறத்துடனும், பழ பகுதியில் மஞ்சள் நிறத்துடன் பழுப்பு நிறமும் கலந்து இருக்கும்.3. இயற்கையாக விளையக்கூடிய பழங்கள், சிறிது அடிபட்டு இருப்பதை போன்று இருக்கும். ஆனால் வேதிப்பொருள் கலந்த பழங்கள் சீரான அமைப்பையும், அதன் பராமரிப்பும் மக்களை கவர்கிறது. அசலை விட போலிக்கே இவ்வுலகில் மதிப்பு அதிகம்.