ads

கர்ப்பிணிப் பெண் மரணம் மனிதத்தை ஏற்க மறுக்கும் சீருடைகள்

மனிதத்தை ஏற்க மறுக்கும் சீருடைகள்

மனிதத்தை ஏற்க மறுக்கும் சீருடைகள்

மகளீராய் பிறப்பதற்க்கே மாதவம் செய்திடவேண்டுமம்மா என்று பாடிய தமிழகத்தில் அப்படிப்பட்ட மகத்துவம் செய்த்தவர்களின் தினத்தை இன்று இரு உயிராய் இருந்த பெண்ணின் இறுதிச் சடங்கோடு கொண்டாட விளைந்துள்ளோம். பல காலமாகவே காவல் காக்கவேண்டிய சீருடைகளாலேயே பல கொலைகளும் கற்பழிப்புகளும் நிகழ்த்தப்பட்டுவருகின்றன. அப்படிப்பட்ட ஒரு அராஜக சீருடைக்காரரின் அராஜகத்தால் திருச்சியில் ஒரு கர்பிணி கொல்லப்பட்டுள்ளார்.

தஞ்சை மாவட்டம் பாபநாசம் பகுதியைச் சேர்ந்த ராஜா (40) அவரது மனைவி உஷா(30), இருவரும் மோட்டார் பைக்கில் திருச்சி சாலையில் 6:30 மணியளவில் திருச்சி நோக்கி பயணித்துக்கொண்டிருந்தனர். அவர்கள் இருவரும் தூவாக்குடி சுங்கச்சாவடியை கடக்க முற்பட்டபோது போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ், ராஜா ஹெல்மெட் அணியாமல் சென்றதால் நிறுத்தியுள்ளார். 

ராஜா கவனிக்காமலோ அல்லது பயத்திலோ நிறுத்தாமல் சென்றுள்ளார். ஆனால் காமராஜ் அவர்கள் இருவரையும் தனது வாகனத்தில் துரத்திச்சென்று திருச்சி- தஞ்சை சாலையில் அமைந்திருந்த ஒரு ரவுண்டானா அருகில் சென்றுகொண்டு இருக்கையில் காமராஜ் ராஜா தம்பதியினர் சென்ற பைக்கை உதைத்துள்ளார் இப்படியே இரண்டு முறை உதைத்துள்ளார் முன்றாவது முறையாக உதைத்ததில் நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக உஷா பின்னால் வந்துகொண்டிருந்த டெம்போவின் அடியில் மாட்டிக்கொண்டார். டெம்போ அவர்மீது எறியதில் உஷா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அந்த கொடூர சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் உடனே அப்பகுதியை சுற்றிவளைக்கத் துவங்கவே ஆய்வாளர் காமராஜ் அங்கிருந்து சென்றுவிட்டார். தான் செய்தது தவறு என்று கூட அவர் உணராமல் அவசர உதவியையும் அழைக்காமல் அங்கிருந்து ஓடியுள்ளார். என்ன செய்வதென்று அறியாத ராஜா நாடு ரோட்டிலேயே தன் மனைவியை கட்டிக்கொண்டு அழுதுள்ளார். என்ன செய்திருக்கமுடியும் அவரால் அழுவதைத்ததவிர. உடனே அருகிருந்தவர்கள் ஆம்புலன்ஸை அழைத்து உஷாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அனால் மருத்துவர்கள் உஷா சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக உறுதிசெய்துவிட்டனர். 

உஷா மூன்றுமாத கர்பிணி என்பது ராஜா கதறி அழும்போதுதான் தெரியவந்தது. அவர்கள் இருவருக்கும் திருமணமாகி பத்து ஆண்டுகளுக்கும் மேல் ஆகின்றது எனவும் மூன்று மாதங்களுக்கு முன்னர் உஷா கர்ப்பமானார் என்றும் தகவல்கள் கிடைத்தன. 

உஷாவின் மரணத்திற்கு நீதி வேண்டுமென திருச்சி மக்கள் போராட்டத்தில் இறங்கினர். போக்குவரத்து ஆய்வாளர் காமராஜை உடனே கைது செய்யவேண்டும் என்றும் அவருக்கு கடுமையான தண்டனை அளிக்கவேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் கோஷமிட்டதை அடுத்து இன்று காலை காமராஜை பொலிஸார் கைது செய்தனர். அவரை 21-ம் தேதி வரை நீதிமன்றக்க காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சட்ட விதிகளை மதிக்காமல் ஹெல்மெட் அணியாமல் சென்றது குற்றமானாலும் காவல் ஆய்வாளர் ராஜாவின் வாகன என்னை வைத்து அவர்மீது சட்டப்படி நடவாதிக்கை எடுப்பதை மறந்து அவர்களை துரத்திச் சென்று உதைத்தது அதைவிட பெரும் குற்றம். கட்டுப்பாடுகளை சுமக்கவேண்டிய காவல் அதிகாரி தன்  சுய உணர்வுகளையும் கோபத்தையும் தனக்கு அளிக்கப்பட அதிகாரத்தால் தவறாக உபயோகப்படுத்தியதால் ஒரு கர்பிணிப்பெண்ணின் உயிர் போனது. யாருக்குத் தெரியும் அந்த சிசு கூட பெண்ணாக இருந்திருக்கலாம்.

சட்ட விரோதிகளை விட்டுவிட்டு ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களை  துரத்திச்செல்வதே காவல் துறையினருக்கு வேலை என்று திருச்சி மக்கள் வேதனையோடு கூறுகின்றனர். இவர் போன்ற காவல் அதிகரிகளால்தான் ஒட்டுமொத்த காவல் துறையும் தன் கௌரவத்தை இழக்க நேரிடுகிறது என்றும் கூறுகின்றனர்.

நல்ல சாலை வசதிகள் மக்கள் நலனுக்காக என்பதை அரசாங்கம் மறந்தது, ஹெல்மெட் அணிவது மக்கள் நலனுக்காகவே என்பதை மக்கள் மறந்தனர், தான் உண்மையான கடமை என்ன என்பதை காவல் துறை மறந்தது, கடமை தவறிய காவல் துறையினரை தண்டிக்க மீண்டும் அரசாங்கம் மறந்தது ஒரு சங்கிலித் தொடராக ஒரு குற்றத்தின் பின்னணி ஒன்றன்பின் ஒன்றாக கைகோர்த்துக்கொண்டே செல்கிறதே. இந்நிலை என்றுதான் மாறும்? அவரவர் கடமையை அவரவர் உணர்வது எப்போது? வீணாக பெண்களோ குழந்தைகளோ ஆண்களோ  அப்பாவிகளின் ஜீவன் பறிக்கப்படுவது எப்போது முடியம்?     

மகத்துவதோடு கொண்டாடவேண்டிய மகளீர் தினத்தை வேதனைகளோடு எதிர்கொண்டுள்ளோம் இன்று. மனிதியையும் மனிதத்தையும் இனியாவது போற்றத்ததொடங்குவோம். சீருடை அணிந்தாலும் புகழுடை அணிந்தாலும் அதிகார உடை தரித்தலும் மனிதர்கள் என்பதை உணர்வோம்.  

கர்ப்பிணிப் பெண் மரணம் மனிதத்தை ஏற்க மறுக்கும் சீருடைகள்