ads

இனி ஒரு அனிதாவை நீட்டால் பறிகொடுக்கக்கூடாது என்பதற்காக உருவாகும் ஜிவி பிரகாஷின் மொபைல் செயலி

நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக நடிகர் ஜிவி பிரகாஷ் மொபைல் செயலி ஒன்றை தயாரித்து வருகிறார்.

நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக நடிகர் ஜிவி பிரகாஷ் மொபைல் செயலி ஒன்றை தயாரித்து வருகிறார்.

நீட் தேர்வினால் மருத்துவர் ஆகும் கனவு பறிபோனதை நினைத்து அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். இவருடைய தற்கொலைக்கு நீதி கேட்டு தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டில் போராட்டங்களை கையில் எடுத்தது. இவருடைய இழப்பிற்கு சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், பொது மக்கள் என அனைவரும் இரங்கல் தெரிவித்தனர்.

தற்போது நடிகர் ஜிவி பிரகாஷ் மற்றொரு அனிதாவை இந்த உலகம் இழக்க கூடாது என நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக மொபைல் செயலி ஒன்றை உருவாக்கி வருகிறார். இது குறித்து ஜிவி பிரகாஷ் தனது சமூக வலைத்தளத்தில் "நீட் எனும் அரக்கனால் நமது தங்கை அனிதாவை இழந்தோம். அனிதாவின் வீட்டிற்கு சென்ற போது இனியொரு அனிதாவை பறிகொடுக்கக்கூடாது என தீர்க்கமான முடிவை எடுத்தேன்.

என் நண்பர்களுடன் பேசி, வல்லுநர்கள், ஆசிரியர்களை ஒன்றிணைந்து நீட் தொடர்பாக மூன்று மாத வரைவு திட்டத்தை தயாரித்து தமிழ்வழி, ஆங்கில வழி மாணவர்கள் இலவசமாக பயன்பெறும் வகையில் மென்செயலி (Mobile Application) ஒன்று உருவாகி வருகிறது. தகுதியான மதிப்பெண்கள் பெற்றிருந்தும் பணம் என்ற ஒற்றை காரணத்தால் எந்த மாணவரும் பாதிப்படைய கூடாது என்பதற்காக எங்களால் முடிந்த முயற்சி. இன்னும் சில காலங்களில் இந்த செயலி பயன்பாட்டிற்கு வரும். செயலி உருவாக்க உதவும் எனது குழுவுக்கு வாழ்த்துக்கள்." என்று அவர் தெரிவித்துள்ளார். 

இனி ஒரு அனிதாவை நீட்டால் பறிகொடுக்கக்கூடாது என்பதற்காக உருவாகும் ஜிவி பிரகாஷின் மொபைல் செயலி