ads

ஐஸ்வர்யா ராய்க்கு கொடுத்தாங்க சரி..ஆனா டயானாவுக்கு எதுக்கு உலக அழகி பட்டம்

மகாபாரத சர்ச்சை பேச்சை தொடர்ந்து திரிபுர முதல்வர் அடுத்த சர்ச்சை கருத்தை பதிவு செய்துள்ளார்.

மகாபாரத சர்ச்சை பேச்சை தொடர்ந்து திரிபுர முதல்வர் அடுத்த சர்ச்சை கருத்தை பதிவு செய்துள்ளார்.

தற்போது இந்தியாவில் திரிபுரா முதல்வர் பிப்லாக் தேவ்வின் சர்ச்சையான பேச்சுக்கள் மக்களிடம் பிரபலமாகி வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் முதல்வர் பிப்லாக் தேவ் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மகாபாரத காலத்திலே இன்டர்நெட், சேட்டிலைட் பயன்பாடு இருந்துள்ளது என்ற சர்ச்சையான கருத்தை பதிவு செய்தார். இவரின் இந்த வேடிக்கையான கருத்து இந்தியாவின் பட்டிதொட்டியெல்லாம் பரவியது. இதன் மூலம் ஒரே நாளில் வைரலானார். இதனை தொடர்ந்து தற்போது சர்ச்சையான கருத்தை பதிவு செய்து சிக்கியுள்ளார்.

நேற்று அகர்தலாவில் ஒரு கைத்தறி கண்காட்சியை தொடங்கி வைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் "அழகு சாதன பொருட்களை தயாரிக்கும் பெரிய நிறுவனங்கள் மூலம் உலக அழகி போட்டிகள் நடத்தப்படுகின்றன. உலக அழகி பட்டம் யாருக்கு கொடுக்க வேண்டும் என்பதை முன்கூட்டியே முடிவு செய்து விழாவை நடத்துகின்றனர். சர்வதேச நிறுவனங்கள் தயாரிக்கும் அழகு சாதன பொருட்களை பெண்களின் முகத்தில் பூசிக்கொண்டும், ஆடைகளை அணிவித்தும் வலம் வரச்செய்கின்றனர்.

கடந்த 5 ஆண்டுகளில் இந்திய பெண்மணிகளுக்கு உலக அழகி பட்டங்கள் கிடைத்துள்ளது. ஆனால் இந்த உலக அழகி பட்டம் நமது இந்தியாவில் எந்த ஒரு பெண்மணி கலந்து கொண்டிருந்தாலும் கிடைத்திருக்கும். அவ்வளவு ஏன் டயானா ஹைடன் கூட இதில் கலந்து கொண்டு வென்று விட்டார். இதனை உங்களால் நம்ப முடிகிறதா?..நான் இதை எதிர்க்கவில்லை. உலக அழகி பட்டம் தரும் முறையை தான் எதிர்க்கிறேன். இந்திய பெண்மணி ஐஸ்வர்யா ராய்க்கு கடந்த 1997இல் உலக அழகி பட்டம் கொடுத்தார்கள்.

அதில் நியாயம் இருந்தது. இந்திய பெண்மணிகள் பொதுவாக லட்சுமி சரஸ்வதியின் சாயலில் இருப்பார்கள். இதில் ஐஸ்வர்யா ராய்க்கு அந்த அழகும், சிறப்பும் இருந்தது. முன்பெல்லாம் நமது இந்திய பெண்மணிகளுக்கு அழகு சாதன பொருட்கள் பற்றி தெரியாது. ஆனால் தற்போது உலகம் நவீனம் ஆனதற்கு பிறகு அழகு சாதனங்களை விற்கும் சில மாபியா நிறுவனங்கள் இந்தியாவின் பெரும்பாலான சந்தையை பிடித்துவிட்டது.

இந்தியாவின் மக்கள் தொகையில் 50 சதவீதம் இருக்கும் பெண்கள் சந்தையை பிடிக்கவே கடந்த 5 ஆண்டுகளாக இந்திய பெண்மணிகளுக்கு பட்டம் கொடுத்தார்கள். இதன் பிறகு தற்போது இந்தியாவில் உள்ள மூலை முடுக்கெல்லாம் அழகு சாதனம் பொருட்கள் பிரபலமாகி விட்டது. இதனால் தற்போது இந்த பொருட்களை தயாரிக்க இந்தியா தொழிற்சாலை கூடமாக மாறிவிட்டது. இந்த நிறுவனங்கள் நினைத்தது போல் தற்போது இந்தியா மாறிவிட்டது.

இதனால் தற்போது ஒரு இந்திய பெண்மணிக்கு கூட உலக அழகி பட்டம் கொடுப்பதில்லை. அடுத்த பலி ஆடுகளை தேடி அலைகிறது." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இவர் சர்ச்சையாக கூறி இருந்தாலும் இவரின் பேச்சில் நியாயம் இருக்கிறது. அழகு சாதன பொருட்கள் வந்துவிட்டதால் இந்தியாவில் சிறு குழந்தைகள் முதல் கிழவிகள் வரை அதனை உபயோகப்படுத்த ஆரம்பித்து விட்டனர். அவ்வளவு ஏன் அழகு சாதன பொருட்கள் இல்லாமல் தற்போதுள்ள இந்திய பெண்மணிகள் வீட்டை விட்டு கிளம்புவதில்லை. அழகு சாதன பொருட்களை பயன்படுத்தும் நடிகைகளும் சரி, பெண்மணிகளும் சரி அவர்களை மேக்கப் இல்லாமல் பார்க்கவே முடிவதில்லை. இது எங்கு சென்று விடப்போகிறதோ..

ஐஸ்வர்யா ராய்க்கு கொடுத்தாங்க சரி..ஆனா டயானாவுக்கு எதுக்கு உலக அழகி பட்டம்