ads
முதன் முதலாக இந்திய கடற்படைக்கு ஒரு பெண் பைலட் தேர்வு
புருசோத்தமன் (Author) Published Date : Nov 24, 2017 16:35 ISTஇந்தியா
சுபாங்கி சொருப், இவர் உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த கடற்படை கமாண்டரின் மகள். இவர் கடற்படை தொடர்பான பயிற்சியை கேரளா மாநிலம் கண்ணூரில் அமைந்துள்ள எலிமலா நேவல் அகாடமியில் பயிற்சி பெற்றார். தற்போது இவர் இந்திய கடற்படையின் விமான பைலட்டாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் இதே பயிற்சி மையத்தில் பயின்ற டெல்லியை சேர்ந்த அஸ்தா சேகல், கேரளாவை சேர்ந்த சக்தி மாயா, புதுச்சேரியை சேர்ந்த ஏ.ரூபா ஆகியோர் இந்திய கடற்படையின் ஒரு பிரிவான கடற்படை ஆயுத ஆய்வாளர் (Naval Armament Inspectorate-NAI) பணிக்கு பெண் அதிகாரிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு வழியனுப்பு விழா நேற்று முன்தினம் நடந்தது. இந்த விழாவில் கடற்படை தலைவர் அட்மிரல் சுனில் லான்பா கலந்துகொண்டார். மேலும் இந்திய கடற்படைக்கு தேர்வாகியுள்ள நான்கு பெண்களின் 20 வயதுடையவர்கள். இதில் விரைவில் கண்காணிப்பு விமானங்களை சுபாங்கி சொருப் இயக்க உள்ளார். இது குறித்து சுவாங்கி சொருப் பேசியபோது, "இந்திய கடற்படையின் முதல் பெண் பைலட்டாக என்னை தேர்வு செய்ததன் மூலம் என்னுடைய கனவு தற்போது நிறைவேறியுள்ளது." என்று தெரிவித்துள்ளார்.