ads

ஒருபக்கம் நேர்மையான அதிகாரி மறுபக்கம் அப்பாவி தாக்கப்பட்டுள்ளார்

ஒரு காவல் அதிகாரி மிக நேர்மையாகவும் துணிச்சலாகவும் உயர் அதிகாரியின் மகளை எதிர்த்து பேசியது வரவேற்க வேண்டிய ஒன்று

ஒரு காவல் அதிகாரி மிக நேர்மையாகவும் துணிச்சலாகவும் உயர் அதிகாரியின் மகளை எதிர்த்து பேசியது வரவேற்க வேண்டிய ஒன்று

இன்று தாய் மற்றும் சகோதரியின் கண் முன்னே வாலிபர் ஒருவர் போக்குவரத்து அதிகாரிகளால் தாக்கப்பட்டார். ஹெல்மெட் அணியாதது குற்றமே ஆனால் அதற்காக பொது மக்களை தாக்குவது சமுதாயத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், மற்ற ஒரு காவல் அதிகாரி மிக நேர்மையாகவும் துணிச்சலாகவும் உயர் அதிகாரியின் மகளை எதிர்த்து எதிர்த்து நேர்மையாக நடந்துகொண்டது வரவேற்க வேண்டிய ஒன்று.

பீச் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஒரு காவல் அதிகாரி, தடை செய்யப்பட்டிருந்த இடத்தில் அதுவும் இரவில் சந்தேகத்தின் அடிப்படையில் பார்த்தபோது காரின் உள்ளே இருந்த நபர் மதுபான பாட்டிலை கையில் வைத்தபடி இருந்துள்ளார். காரில் இருந்து இறங்கிய பின் அவர்கள் காவல் அதிகாரியை மிரட்ட துவங்கினர். காரில் இருந்த பெண்மணியுடன் இருந்தவர், இவர் டிஜிபி அவர்களின் மகள் என்றும், நீங்கள் யார் கேட்பதற்கு என  கேட்டு காவல் அதிகாரி தனது கடமையை செய்ய விடாமல் தடுத்துள்ளனர்.

அவர் குறிப்பிடும் காவல் அதிகாரியின் மகள் ஒருபடி மேல் சென்று, நீங்கள் இங்கு நடப்பதை கேமராவில் பதிவு செய்தால் உங்களுக்கு பிரச்னை வரும். இவன் என்ன பைத்திய காரனா என்று வினவி உங்களை டுட்டியை விட்டு அனுப்பவா என்று மிரட்டியுள்ளார். எதற்கும் அஞ்சாத காவல் அதிகாரி சரி முடிஞ்சா அனுப்புங்க என்று மிக துணிச்சலுடன் நேர்மையாக எதிர்த்துள்ளார். இந்த வீடியோ தற்பொழுது வாட்சப் மற்றும் அனைத்து சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி இருக்கிறது. 

ஒருபுறம் அடிதடி போலீஸ், மறுபுறம் நேர்மையான போலீஸ். மக்கள் எதிர் பார்ப்பது என்னவென்றால் வெளிநாட்டு செய்திகளில் காண்பிப்பதைப்போல் நேர்மை மற்றும் பொது மக்களை அடிக்காமல் சட்டத்தில் ஒப்படைப்பது.

video credit - Mobile Journalist

ஒருபக்கம் நேர்மையான அதிகாரி மறுபக்கம் அப்பாவி தாக்கப்பட்டுள்ளார்