தீவிரமடையும் ஸ்டெர்லைட் போராட்டம் அதிகரிக்கும் பொது மக்களின் உயிரிழப்புகள்

       பதிவு : May 24, 2018 15:57 IST    
ஸ்டெர்லைட் போராட்டத்தில் அரசியல் சூழ்ச்சிகளால் தூத்துக்குடி ரத்த வெள்ளமாக மாறியுள்ளது. கலவரத்தையும், பொது மக்களையும் கட்டுப்படுத்த பொது மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி வருகின்றனர். ஸ்டெர்லைட் போராட்டத்தில் அரசியல் சூழ்ச்சிகளால் தூத்துக்குடி ரத்த வெள்ளமாக மாறியுள்ளது. கலவரத்தையும், பொது மக்களையும் கட்டுப்படுத்த பொது மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடியில் 100 நாட்களை கடந்து நடந்து வரும் ஸ்டெர்லைட் போராட்ட களம் தற்போது ரத்த களமாக மாறியுள்ளது. மக்களின் சுவாச காற்றுக்காக, அடிப்படை தேவைக்காக ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து நீண்ட நாட்களாக நடந்த வரும் போராட்டத்தில் அரசியலும் கலந்து நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக காவல் துறையினர் பொது மக்களின் மீது துப்பாக்கி சூடு நடத்தியும், தடியடி நடத்தியும் வருகின்றனர். காவல் அதிகாரிகள் துப்பாக்கி சூடு நடத்தியதில் தற்போது வரை 13க்கும் மேலானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போராட்டத்தில் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.

போராட்டத்தில் பொது மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த அதிகாரம் கொடுத்தது யார் என்று அதற்கு தனியாக போராட்டம் நடந்து வருகிறது. பொது மக்களின் உயிரிழப்பினால் தீவிரமடைந்துள்ள ஸ்டெர்லைட் போராட்டத்தின் விளைவாக தற்போது தூத்துக்குடி, திருநெல்வேலி போன்ற மூன்று மாவட்டங்களில் இணையதளம் துண்டிக்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு செல்லும் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. இணையதளம் துண்டிக்கப்பட்டால் போராட்டம் அமைதியாகும் என்ற நம்பிக்கையில் அரசாங்கம் இப்படி ஒரு வேலையை செய்துள்ளது.

ஆனால் அரசாங்கத்தின் எதிர்பார்ப்புக்கு மாறாக தமிழகம் முழுவதுமுள்ள மக்கள் கொதித்தெழுந்துள்ளனர். தற்போது முதலமைச்சர் எடப்பாடி, மோடி ஆகியோரை சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூட்டிற்கும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை அரசாங்கம் சந்திக்காதது ஏன் என்று எடப்பாடியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கேள்விக்கு அவர், பொது மக்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த துப்பாக்கி சூடு நடத்தியதாகவும், 144 தடை உத்தரவு உள்ளதால் சட்டத்தை மீறி மக்களை சந்திக்க முடியாது என்றும் பதிலளித்துள்ளார்.

 

இவருடைய குழந்தைத்தனமான பதில் மக்களை மேலும் ஆத்திரமடைய செய்துள்ளது. இது தவிர கலவரத்தை காவல் துறையிடமும், மக்களிடமும் தூண்டி விட்டு அதில் குளிர்காயும் எதிர்கட்சியினரின் சூழ்ச்சியும் மக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கலவர பூமியாக காணப்படும் தூத்துக்குடியில் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் முழு கடையடைப்பு போராட்டமும் நடைபெற்று வருகிறது. மேலும் தற்போது மக்களிடையே, நிரந்தரமாக ஸ்டெர்லெட் ஆலையை மூடும் வரை நடைபெற்று வரும் போராட்டத்தில் இன்னும் எத்தனை உயிர்கள் பறி போகும் என்ற அச்சம் இருந்து வருகிறது. மக்களையும் மனித உயிர்களையும் மதிக்காத அரசாங்கத்தை எதிர்த்து பொது மக்களின் கருத்துக்களால் தற்போது போராட்ட களத்தில் மாணவர்களும் களமிறங்கியுள்ளனர்.


தீவிரமடையும் ஸ்டெர்லைட் போராட்டம் அதிகரிக்கும் பொது மக்களின் உயிரிழப்புகள்


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்