ads
இனி சிம் கார்டை வாங்குவதற்கு ஆதார் கட்டாயமில்லை
வேலுசாமி (Author) Published Date : May 02, 2018 10:06 ISTஇந்தியா
உலகின் இரண்டாவது பெரிய மக்கள் தொகை நாடான நமது இந்தியாவில் ஒவ்வொரு தனிநபருக்கு ஆதார் அடையாள அட்டை கொண்ட 12 இலக்க எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் குறைந்தது 182 நாட்கள் வசித்த ஒருவருக்கு இந்த ஆதார் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் நந்தன் நீலகேனி என்பவரின் தலைமையில் கடந்த 2009 பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது.
இதன் பிறகு தற்போது பொது மக்கள் மத்தியிலும் அரசு அலுவலகத்திலும் தனிநபரின் அடையாளமாக இந்த ஆதார் எண் வளம் வருகிறது. தற்போது வேலை வாய்ப்பு, வங்கிகள், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் செல்போன், சிம் கார்ட் போன்ற அனைத்து துறைகளுக்கும் இந்த ஆதார் தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முன்னதாக தொலைத்தொடர்பு துறையில் ஆதார் எண்ணை இணைக்க கோரி மெசேஜ்களும், கஸ்டமர் அழைப்புகளும் பொது மக்களுக்கு வந்த வண்ணம் இருந்தது. ஆனால் தொலைத்தொடர்பு துறையில் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமில்லை என மத்திய தொலைத்தொடர்பு உத்தரவு பிறப்பித்தது.
இதனை தொடர்ந்து தற்போது சிம் கார்டை பெறுவதற்கும் ஆதார் எண் அவசியமில்லை என அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவின் படி இனி சிம் கார்டை வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, பான் கார்டு போன்றவற்றை வைத்தும் சிம் கார்டை வாங்கலாம். இதற்காக ஆதார் எண் கொடுப்பது கட்டாயமில்லை என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொது மக்களின் பாதுகாப்பு கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.