ads

11400 கோடி இல்லை 5000 கோடி மட்டுமே கடன் உள்ளது நீரவ் மோடி கடிதம்

nirav modi letter to punjab national bank management about his scam

nirav modi letter to punjab national bank management about his scam

தொழிலதிபர் நீரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் சட்டவிரோதமாக ரூ.11,400 கோடியை  பணப் பரிவர்த்தனை செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். ஆனால் அவர் ஒரு வாரத்திற்கு முன்னரே இந்தியாவை விட்டு வெளிநாட்டிற்கு தப்பித்து சென்று விட்டதாக கூறப்பட்டது.

இதனை தொடர்ந்து அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தி சுமார் 5100 கோடியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்நிலையில் தற்போது தன் குற்றம் சாட்டப்பட்டுள்ளதை ஒப்புக்கொள்ளும் விதமாக நீரவ் மோடி வெளிநாட்டில் இருந்தபடி கடன் வாங்கிய வங்கிக்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளார். 

இந்த கடிதத்தில் " நான் தர வேண்டிய கடன் தொகையை பஞ்சாப் நேஷனல் வங்கி தவறாக குறிப்பிட்டுள்ளது. ரூ 5000 கோடி மட்டுமே எனக்கு கடன் உள்ளது. ஊடகங்களில் வங்கியின் அவசரத்தால் இந்த செய்தி மிகவேகமாக பரவி மிகப்பெரிய செய்தியாகியுள்ளது.

இதனால் எனது வீடு மற்றும் நிறுவனங்களில் சோதனை மற்றும் பணி முடக்கம் என அடுத்தடுத்த நிகழ்வுகள் அரங்கேறியுள்ளது. இந்த நிகழ்வுகளால் நான் வங்கிகளுக்கு திருப்பி செலுத்த வேண்டிய தொகையை திருப்பி செலுத்த முடியாத சூழல் தற்போது உருவாகியுள்ளது.

கடன் தொகையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வங்கி எனக்கு கொடுத்த நெருக்கடியால் கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி எனது பேச்சுவார்த்தையை கூட நீங்கள் பொருட்படுத்தவில்லை. உங்களுடைய நடவடிக்கைகளால் எனது தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

எனது நிறுவனத்தின் மதிப்பும் மோசமாக சரிந்துள்ளது. வங்கி அதிகாரிகளும், மேலாளர்களும் கடன் குறித்து கடந்த பிப்ரவரி 13 மற்றும் 15 ஆம் தேதிகளில் பேச்சுவார்த்தை நடத்தினர். எனது சொத்துக்களையும் பயர்ஸ்டார் நிறுவனத்தையும் நீங்கள் என்மீது புகார் பதிவு செய்த பின்னரும் நல்லெண்ணத்தின் அடிப்படையில் கோரிக்கை வைத்தேன். ஆனால் இதையும் நீங்கள் பொருட்படுத்தவில்லை.

நான் வாங்கிய கடனை திருப்பி செலுத்த தயாராக உள்ளேன். நான் வாங்கிய கடனை திருப்பி செலுத்தவும் தயாராக உள்ளேன். எனது நிறுவனங்களில் வேலை செய்யும் 2000க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு சம்பளம் தரவேண்டியுள்ளது. இதனை தயவு செய்து அனுமதிக்குமாறு வேண்டிக்கொள்கிறேன்" என்று அவர் எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

11400 கோடி இல்லை 5000 கோடி மட்டுமே கடன் உள்ளது நீரவ் மோடி கடிதம்