ads

தூத்துக்குடியில் மழை பெய்ததற்கு ஸ்டெர்லைட் ஆலையை மூடியதே காரணம்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடியதால் மழை பெய்துள்ளதாக அதிமுக எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடியதால் மழை பெய்துள்ளதாக அதிமுக எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி அப்பகுதி மக்கள் நீண்ட காலங்களாக போராடி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக தமிழகத்தின் பெரும்பாலான பொதுமக்கள் மற்றும் அரசியல், சினிமா பிரபலங்கள் என ஆதரவு தெரிவித்து போராடி வந்தனர். சமீபத்தில் ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து இயங்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் தடை விதித்துள்ளது. எனினும் நிரந்தரமாக மூடக்கோரி தொடர் போராட்டங்கள் நடந்து கொண்டுதான் வருகிறது. இருக்கும் கொஞ்ச நஞ்ச தண்ணீரையும் தொழிற்சாலைகள் பாரபட்சம் பார்க்காமல் உறிஞ்சி விடுகின்றன.

இதற்கு பலனாக தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகள், நச்சு வாயுக்கள் போன்றவை சுற்றியுள்ள பல கிமீ தூரத்திற்கு தண்ணீர் இல்லாமலும், அப்பகுதி மக்கள் நோய்வாய் பட்டும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுபோதாதென்று இந்த தொழிற்சாலைகளை 400 ஏக்கர் பரப்பளவில் விரிவு படுத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதனால் கொதித்தெழுந்த மக்கள் போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர். ஆனால் நீண்ட நாள் போராட்டத்திற்கு பிறகு தான் மக்களின் அழுகுரல் அரசாங்கத்தின் காதில் விழுந்துள்ளது.

ஆனால் மக்களின் வாழ்க்கைக்கு சாபக்கேடாக இருக்கும் இத்தகைய தொழிற்சாலைகளை அரசாங்கம் ஆதாரத்து தான் வருகிறது. இந்நிலையில் தற்போது தூத்துக்குடியில் அதிமுக எம்எல்ஏ சண்முகநாதன் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில், "மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்குடி மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு நிரந்தரமாக மூட வேண்டும். மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் தமிழக அரசு செயல்படும். ஸ்டெர்லைட் ஆலை செயல்பட தற்காலிகமாக தான் செய்யப்பட்டுள்ளது.

ஆனால் இதனை நிரந்தரமாக மூட உத்தரவிட வேண்டும். கடம்பூர் ராஜூ ஸ்டெர்லைட்ஆலை எதிர்ப்பு போராட்டம் வேண்டாம் என்று கூறியது அவரது தனிநபர் கருத்து. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கிய ஊராட்சி ஒன்றியம், மாவட்ட நிர்வாகம் போன்றவைகள் தொடக்கத்தில் இருந்து வழங்கிய அனைத்து அனுமதியையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

மக்கள் தங்களின் வாழ்க்கைக்காக பாதிப்பை ஏற்படுத்தும் இந்த ஆலையை எதிர்த்து நீண்ட நாட்களாக போராடி வருகின்றனர். ஆனால் மக்களை போராடக்கூடாது என்று யாரும் சொல்ல உரிமையில்லை. ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக யார் கருத்து தெரிவித்தாலும் அவர்கள் தூத்துக்குடி மக்களுக்கு துரோகம் இலைக்கும் துரோகிகள். தற்போதுள்ள சூழலில் ஸ்டெர்லைட் ஆலையை தற்காலிகமாக மூடியதால் தான் தூத்துக்குடி பகுதியில் மழை பெய்துள்ளது." என்று அவர் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் மழை பெய்ததற்கு ஸ்டெர்லைட் ஆலையை மூடியதே காரணம்