ads

13 ஆண்டுகளாக அழியாத ஆழிப்பேரலை சுவடுகள்

2004 indian ocean tsunami

2004 indian ocean tsunami

நேற்று கிறிஸ்துமஸ் தினம் அனைவராலும் கொண்டாடப்பட்டது. ஆனால் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் அடுத்தநாள் விடியல் தமிழகத்தில் பெரும் துயரத்தை ஏற்படுத்திய நினைவு என்று. கடந்த 2004-ஆம் ஆண்டு இதே டிசம்பர் 26-ஆம் தேதி தமிழகத்தின் கடலோர மாவட்டங்களை ஆழிப்பேரலை (சுனாமி) தாக்கியது. தற்போது நினைத்தாலும் அதன் கோரத்தாண்டவம் நடுங்க வைக்கும். யாரும் எதிர்பார்த்திராக சில தருணத்தில் ஆழிப்பேரலை ஏராளமானோர் உயிரை பறித்தது.

இதற்கு முன்னர் எந்த இயற்கை சீற்றமோ, சுனாமியோ இத்தனை உயிர்களை பலி கொண்டது இல்லை. அதுவும் தமிழகத்திற்கு இந்த ஆழிப்பேரலை ரொம்பவே  புதியது. 2004-ஆம் ஆண்டு டிசம்பர் அதிகாலை 12.58 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் பூமிக்கு அடியில் உள்ள நிலத்தட்டுகள் சரிந்தது. இந்த நிலநடுக்கங்கள் 10 நிமிடங்கள் வரை நீடித்தது. உலகின் இரண்டாவது பெரிய நிலநடுக்கமாக ரிக்டர் அளவுகோலில் 9.3 ஆக பதிவானது. கடலுக்கடியில் 30 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் சுமார் 1600 கி.மீ நீளமுடைய நிலத்தட்டுகள் சரிவடைய காரணமாக அமைந்தது.

நிலத்தட்டுகள் சரிந்ததால் அந்த இடத்தில் இருந்த நிலம் இடம்பெயர்ந்தது. இதனால் அதிவேகமாக கடல்நீரை தள்ளி ஆக்ரோஷமாக ஆழிப்பேரலை கிளம்பியது. கடலோரம் இதன் அலைகள் சுமார் 100 மீ உயரத்தில் எழும்பி அனைத்து பொருட்களையும் நாசம் செய்தது. இந்தியா, இலங்கை, இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா உள்ளிட்ட 11 நாடுகளில் சுமார் 2.30 லட்சம் மக்கள் இந்த ஆழிப்பேரலையால் உயிரிழந்தனர். இந்தியாவில் மட்டும் 10,000 மக்கள் உயிரிழந்தனர். குறிப்பாக தமிழ்நாட்டில் மட்டும் 7,000 மக்களுக்கும் அதிகமானோர் பலி ஆகினர்.

பாதிக்கப்பட்ட  மக்களுக்கு உதவி செய்ய ஏராளமான மக்களும் சமூகநல அமைப்புகளும், அரசுத்துறைகளும் முன்வந்தது. ஆனால் தற்போது வரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு இருக்க இடமும், உடுத்த உடையும், உண்ண உணவும் இல்லாமல் தவித்து வருகின்றனர். 2004-ஆம் ஆண்டு இந்தியாவை சுனாமி தாக்கியபோது எச்சரிக்கை கருவிகள் இல்லை. ஆனால் தற்போது இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டாலோ, நிலநடுக்கம் ஏற்பட்டாலோ எச்சரிக்கை விடுக்கும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது. இனியாவது எச்சரிக்கையாக இருப்போம்.

மேலும் 13 ஆண்டுகள் ஆகியும் நினைவில் இருந்து அகலாத இந்த சம்பவத்திற்கு ஏராளமான மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சுனாமியின் நினைவு தினமான இன்று கடலோர மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. கடலூரில் உள்ள மீன் மார்கெட்டுகள் மூட பட்டுள்ளது. சுனாமியில் பலியான மக்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தும் விதமாக அவர்களின் புகைப்படங்களை வைத்து விளக்கேற்றி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

13 ஆண்டுகளாக அழியாத ஆழிப்பேரலை சுவடுகள்