நடிகர் மன்சூர் அலிகானை விடுவிக்க கோரி கமிஷனர் அலுவலகத்தில் மனுகொடுத்த சிம்பு

       பதிவு : Apr 21, 2018 10:39 IST    
மன்சூர் அலிகானை விடுவிக்க கோரி நடிகர் சிம்பு எக்மோர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார். மன்சூர் அலிகானை விடுவிக்க கோரி நடிகர் சிம்பு எக்மோர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார்.

தமிழர் உரிமைக்காக போராடும் காவிரி விவகாரத்தில் நடிகர் சிம்பு தனி ஒரு மனிதராக தனி வழியில் ஆதரவு தெரிவித்து வருகிறார். இவருடைய ஆலோசனைக்கும், கருத்துக்களுக்கும் கர்நாடகா மக்களும், தமிழக மக்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். தமிழருக்காக ஒரு டம்ளர் தண்ணீரை கர்நாடக மக்கள் தர வேண்டும் என்ற சிம்புவின் கோரிக்கையை ஏற்று சமீபத்தில் கர்நாடக மக்கள் ஏராளமானோர் சமூக வலைத்தளங்களில் தமிழர்களுக்கு ஒரு டம்ளர் தண்ணீரை தந்து அரசியல் வாதிகளை திணறிடிக்க செய்தனர்.

இந்த செயல் காவிரி விவகாரத்தில் அரசியல் மட்டுமே செய்யும் அரசியல் தலைவர்களுக்கு பெருத்த அவமானமாக இருந்தது. இதனை தொடர்ந்து நடிகர் சிம்பு காவிரி விவகாரத்தில் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இந்நிலையில் நேற்று அவர் காவிரி விவகாரத்தில் நமக்காக தனி ஒரு மனிதராக போராடி சிறை சென்ற நடிகர் மன்சூர் அலிகானை விடுவிக்க கோரி கமிஷனர் அலுவலகத்தில் நாளை சரியாக காலை 9:00 மணிக்கு மனு கொடுக்க இருப்பதாக வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

இதன்படி தற்போது நடிகர் சிம்பு எக்மோர் கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் மன்சூர் அலிகானை விடுவிக்க கோரி மனு ஒன்றை அளித்துள்ளார். பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ள அவர் "சென்னையில் போராட்டத்தின் போது காவல்துறையினரை தாக்கியதில் உடன்பாடில்லை. நடிகர் மன்சூர் அலிகானை என்ன காரணத்திற்காக கைது செய்துள்ளார்கள் என கேட்க வந்துள்ளேன்" என தெரிவித்துள்ளார்.

 


நடிகர் மன்சூர் அலிகானை விடுவிக்க கோரி கமிஷனர் அலுவலகத்தில் மனுகொடுத்த சிம்பு


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்