ads

வைகோவின் நெருங்கிய உறவினர் தீக்குளிப்பு

வைகோவின் நெருங்கிய உறவினர் தீக்குளிப்பு Imagecredit : @MDMKVaiko

வைகோவின் நெருங்கிய உறவினர் தீக்குளிப்பு Imagecredit : @MDMKVaiko

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, விருதுநகர் கோவில்பட்டியைச் சேர்ந்த 50 வயதான சரவணா சுரேஷ் மதுரை-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை மண்ணெண்ணெய் ஊற்றி  தீக்குளித்தார். இதைப்  பார்த்த ஒருவர், அவரைத் தடுக்க முற்பட்டிருக்கிறார். ஆனால் முடியாமல் போனது. அவர் போலீஸிடம் அளித்த வாக்குமூலத்தில், சுரேஷ் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும் நீட் தேர்வை விலக்கி வைக்கவும் முழக்கங்கள் எழுப்பினார் என்று கூறியிருக்கிறார்.

சுரேஷுக்கு  80 சதவீத தீக்காயங்கள் உடல் முழுவதும் ஏற்பட்டுள்ளது. தற்போது, மதுரை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களின் மைத்துனர் ராமானுஜத்தின் மகனான இவர்  தீக்குளித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வைகோ கூறுகையில், இனி நான் யாருக்கு ஆறுதல் சொல்வேன். நொறுங்கிய இதயத் தோடு யாரும் தீக்குளிக்க வேண்டாம் என்று கட்சித் தொண்டர்களையும் இளைஞர்களையும் கேட்டுக்கொண்டுள்ளார்.

மிகவும் அமைதியான மனிதர் என்று சொல்லப்படும் இவர், மதிமுவின் எந்தப்  பொறுப்பில் கிடையாது. இருப்பினும், கட்சிப் பணிகளை ஆர்வத்துடன் செய்வர் என்று அவருடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவரது மனைவி அமுதா, ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். 

வைகோவின் நெருங்கிய உறவினர் தீக்குளிப்பு