ads
வைகோவின் கண்முன்னே மதிமுக தொண்டர் தீக்குளிப்பு கண்கலங்கிய வைகோ
வேலுசாமி (Author) Published Date : Mar 31, 2018 15:32 ISTPolitics News
தேனியில் பொட்டிபுரம் மலை பகுதியில் நியூட்ரினோ திட்டத்தை அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு தேனீ மாவட்ட விவசாயிகள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். விவசாயிகளுக்கு ஆதரவாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நியூட்ரினோ திட்டத்தை கைவிடவும், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் 10 நாள் நடைபயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார்.
இதன்படி இன்று காலை மதுரையில் பழங்காநத்தத்தில் தனது நடைப்பயணத்தை தொடங்கியுள்ளார். வைகோவின் இந்த நடைப்பயணத்தை திமுக செயல்தலைவர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன் பிறகு மதிமுக தொண்டர் ரவி என்பவர் மேடை அருகே தீக்குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை கண்ட தொண்டர்கள் தீயை அணைத்தனர். இந்த சம்பவம் வைகோவின் கண்முன்னே நிகழ்ந்ததால் கண்ணீர் விட்டார்.
பின்பு பேசிய அவர் "ஏன் இப்படி உயிரை மாய்த்து கொள்கிறீர்கள்?..நாம் போராட வேண்டும்?..தீக்குளித்த நபரை காவல் துறையினர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள். எப்போது சிரித்த முகத்துடன் வலம் வரும் அந்த தம்பியை, இயற்கை தாய் காப்பாற்ற வேண்டும். நான் மன்றாடி கேட்டு கொள்கிறேன். மீண்டும் இது போன்று செய்யாதீர்கள்." என கண்ணீர் மல்க பேட்டி அளித்தார். இதனை அடுத்து தற்போது தீக்குளித்த ரவி என்பவரை தொண்டர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.