தன் மனைவி தோனி மற்றும் பிரதமருக்கு சவால் விட்ட விராத் கோஹ்லி

       பதிவு : May 24, 2018 12:12 IST    
ராஜேவர்தன் ராதோரின் சவாலை ஏற்று கோஹ்லி தற்போது பிரதமர் மோடி, தோனி, அனுஷ்கா சர்மா ஆகியோருக்கு சவாலை விட்டுள்ளார். ராஜேவர்தன் ராதோரின் சவாலை ஏற்று கோஹ்லி தற்போது பிரதமர் மோடி, தோனி, அனுஷ்கா சர்மா ஆகியோருக்கு சவாலை விட்டுள்ளார்.

தற்போது இந்திய அணியின் கேப்டன் மற்றும் ஐபிஎல் பெங்களூரு அணியின் கேப்டனான விராத் கோஹ்லி, பிரதமர் மோடிக்கு சவால் ஒன்றை விடுத்துள்ளார். இது குறித்து அவரது டிவிட்டரில் "நான் ராஜ்யவர்தன் ராதோர் அவரின் பிட்னஸ் சவாலை ஏற்று கொண்டேன். இப்போது நான் எனது மனைவி அனுஸ்கா சர்மா, பிரதமர் மோடி, மகேந்திர சிங் தோனி ஆகியோருக்கு அவரை போன்றே சவால் விடுகிறேன்" என தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

முன்னதாக தற்போதைய விளையாட்டு துறை மந்திரியான ராஜ்யவர்தன் ராதோர் அவர்கள், தனது டிவிட்டரில் "சமூக வலைத்தளத்தில் உங்களுடைய பிட்னஸ் விடீயோவையும் புகைப்படத்தையும் வெளியீட்டு உங்களுடைய நண்பர்களுக்கு சவால் விடுங்கள். இதோ என்னுடைய பிட்னஸ் வீடியோ, இப்போது நான் ஹ்ரித்திக் ரோஷன், விராத் கோஹ்லி, சாய்னா நேவால் ஆகியோருக்கு சவால் விடுகிறேன்" என்று தெரிவித்திருந்தார்.

இவருடைய சவாலை ஏற்று இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி தனது விடியோவை வெளியிட்டு பிரதமர் மோடி, அனுஸ்கா சர்மா, தோனி ஆகியோருக்கு சவால் விடுத்துள்ளார். இந்நிலையில் தற்போது நமது பிரதமரும் இவருடைய சவாலை ஏற்று கொண்டதாக பதிலளித்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடி அளித்த பதிலில் "உங்களுடைய சவாலை ஏற்று கொண்டேன் விராத் கோஹ்லி. விரைவில் என்னுடைய பிட்னஸ் விடியோவை வெளியிடுவேன்" என்று தெரிவித்துள்ளார்.

 


தன் மனைவி தோனி மற்றும் பிரதமருக்கு சவால் விட்ட விராத் கோஹ்லி


செய்தியாளர் பற்றி

விக்னேஷ் சுற்றுப்புற சுகாதாரம் மற்றும் கல்வி சார்ந்த செய்திகளை பெருமளவு எழுதி வருகிறார். இவர் தனது செய்திகளில் கற்பனை திறனையும், புது புது தகவல்களையும் வெளிப்படுத்தி வருகிறார். இவர் செய்திகளை எழுதுவதில் வல்லவர். தனது திறமையால் சிறு தகவல்களை வைத்து அதன் மூலம் நம்மால் ஈன்ற அளவுக்கு தனது முயற்சிகளை வெளிப்படுத்துவார். அனைவரிடத்திலும் வெளிப்படையாக பழக கூடியவர். மற்றவர்களிடமிருந்து புது நுணுக்கங்களையும் நுட்பத்தையும் சேகரித்து தன்னுடைய அறிவை வளர்த்து கொள்வார். இவர் தான் சேகரிக்கும் தகவல்களை மிகவும் எளிமையான முறையில் மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் சிறப்பானதாக விளங்குகிறார். ... மேலும் படிக்க

Vignesh writer and reporter

விக்னேஷ்செய்தியாளர்