ads
கடல் அலைகளின் சீற்றம் காரணமாக தமிழக கடலோர மீனவர்களுக்கு எச்சரிக்கை
வேலுசாமி (Author) Published Date : Apr 20, 2018 16:08 ISTஇந்தியா
கடந்த ஆண்டில் ஏற்பட்ட ஒக்கி புயலால் கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற ஏராளமான மீனவர்கள் உயிரிழந்தனர். மீனவர்களின் உயிரிழப்பிற்கு தமிழக அரசின் அலட்சியமே காரணம், அவர்கள் முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்திருந்தால் நாங்கள் கடலுக்குள் செல்ல விட்டிருக்க மாட்டோம் என மீனவ மக்களின் கண்ணீர் குரல் தமிழகத்தை சோகத்தில் ஆழ்த்தியது. இதன் பிறகு தமிழக அரசு மீனவர்க்ளின் பாதுகாப்பு கடல் கொந்தளிப்பு, வானிலை மாற்றம் போன்றவை ஏற்பட்டால் கவனமுடன் எச்சரிக்கை விடுத்து வருகிறது.
இந்நிலையில் தற்போது கடலில் ஏற்பட்டுள்ள இயற்கை மாற்றம் காரணமாக கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இதனால் தற்போது வருவாய் ஆணையர் சத்யகோபால் என்பவர் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த அவர் "வருகின்ற ஏப்ரல் 21 மற்றும் 22 ஆம் தேதிகளில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் குறிப்பாக ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களின் கடற்பகுதிகளில் கடல் சீற்றம் அதிகமாக இருக்கும்.
இதனால் கடல் அலைகள் 3 .5 மீட்டர் உயரம் வரை கொந்தளிப்புடன் காணப்படும். கடல் சீற்றங்கள் 18-22 வினாடி இடைவெளிகளில் காணப்படும். இதனால் அப்பகுதியில் வசிக்கும் மீனவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கடலுக்குள் சென்று குளிப்பதையும், மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிப்பதையும் தவிர்க்க வேண்டும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.