ads
2017 ஆனந்த விகடன் சினிமா விருதுகள் சிறந்த நடிகை நயன்தாரா
யசோதா (Author) Published Date : Jan 10, 2018 19:29 ISTபொழுதுபோக்கு
தென்னிந்திய திரைப்பட நடிகையான நயன்தாரா (33), கேரளாவில் 1984-ஆம் ஆண்டு பிறந்தார். இவருடைய இயற்பெயர் 'டயானா மரியா குரியன்'. மலையாளத்தில் 2003-ஆம் ஆண்டு வெளியான 'மனசினகாரே' என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். பின்னர் 2005-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தமிழில் வெளியான 'ஐயா' திரைப்படத்தின் மூலம் முதன் முதலில் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். தன்னுடைய இரண்டாம் படத்திலே ரஜினிகாந்துடன் இணைந்து 2005-இல் ஏப்ரல் மாதம் வெளியான 'சந்திரமுகி' படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த படம் 100 நாட்களை கடந்து மாபெரும் வெற்றி பெற்று இன்றளவும் மக்கள் மத்தியில் பேசும் படமாக அமைந்தது.
இவர் இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் 40 கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் ஐயா, சந்திரமுகி, கஜினி, வல்லவன், ஈ, பில்லா, யாரடி நீ மோகினி, குசேலன், சத்யம், ஏகன், வில்லு, பாஸ் என்கிற பாஸ்கரன், ராஜா ராணி, ஆரம்பம், ஸ்ரீ ராம ஜெயம், தனி ஒருவன், நானும் ரவுடி தான், மாயா, இருமுகன், டோரா, அறம், வேலைக்காரன் உள்ளிட்ட பல படங்கள் இவருக்கு வெற்றி படங்களாகவே அமைந்தது. தெலுங்கில் லக்ஷ்மி,பாஸ், யோகி, துபாய் சீனு, துளசி, கதாநாயகடு, சத்யம் போன்ற படங்களிலும், மலையாளத்தில் மனசினக்கரே, விஸ்மயதும்பத்து, நாட்டுராஜாவு, தஸ்கரவீரன், ராப்பகல், பாடிகார்ட் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இதில் 2011-ஆம் ஆண்டு வெளியான 'ஸ்ரீ ராமஜெயம்' படத்தில் இவருடைய சீதா கதாபாத்திரத்திற்கு சிறந்த தெலுங்கு நடிகைக்கான பிலிம்பேர் விருதும், சிறந்த நடிகைக்கான நந்தி விருதும் கிடைத்தது.
மேலும் தமிழில் 2013-ஆம் ஆண்டு வெளியான 'ராஜா ராணி' படத்திற்கும், 2015-இல் வெளியான 'நானும் ரவுடி தான்' படத்திற்கும் தமிழில் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது கிடைத்தது. மேலும் இவருடைய நடிப்பில் 2015-இல் வெளியான அனைத்து படங்களும் வெற்றி பெற்றதால் ஊடகங்கள் இவருக்கு 'லேடி சூப்பர் ஸ்டார்' என பாராட்டி உள்ளது. இவருடைய நடிப்பில், புது முக இயக்குனர் கோபி நயினார் இயக்கத்தில் 'அறம்' படமும், இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் 'வேலைக்காரன்' படமும் தற்போது வெளியாகி மாபெரும் வெற்றியடைந்து மக்கள் மத்தியில் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. மேலும் இவருடைய படங்களில் இதுவரை 46 படங்கள் விருதுக்காக பரிந்துரைக்க பட்டது. அதில் 36 படங்கள் பல விருதுகளை தட்டி சென்றுள்ளது. இவர் தற்போது திரையுலகிற்கு அறிமுகமாகி 14 ஆண்டுகளை கடந்துள்ளார். தற்போது இவருடைய நடிப்பில் வெளிவந்த 'அறம்' படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்நிலையில் ஆனந்த விகடனின் சினிமா விருதுகள் 2017 நடக்க உள்ளது. இதில் சிறந்த படம், சிறந்த நடிகை, சிறந்த இயக்குனர் போன்ற விருதுகளை 'அறம்' படம் தட்டி சென்றுள்ளது.