இணையத்தில் வைரலாகும் நயன்தாராவின் புதிய புகைப்படம்

       பதிவு : Dec 15, 2017 11:49 IST    
jai simha nayanthara stills jai simha nayanthara stills

கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த 'அறம்' படத்திற்கு நல்ல வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் கிடைத்திருந்தது. இந்த வெற்றியை தொடர்ந்து மோகன் ராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக 'வேலைக்காரன்' படத்தில் நடித்துள்ளார். வருகிற 22ம் தேதி வெளிவர இப்படத்தின் போஸ்டர், இசை போன்றவை முன்னதாகவே வெளிவந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது. 

இந்நிலையில் தமிழ் திரையுலகின் முன்னனி இயக்குனர்களின் ஒருவரான  கேஎஸ். ரவிக்குமார் இயக்கத்தில் தெலுங்கில் வெளிவர உள்ள 'ஜெய் சிம்ஹா' என்ற ஆக்சன் த்ரில்லர் படத்தில் நடிப்பதற்கு நயன்தாரா ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நந்தமுறி பாலகிருஷ்ணா  நாயகனாக நடிக்கிறார். இப்படத்திற்காக பாடல் ஷூட்டிங் துபாயில் நடைபெற்று வரும் இந்நிலையில் நயன்தாராவின் ஒரு புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் இன்று வெளியிட்டுள்ளனர். தற்பொழுது இந்த புகைப்படம் வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

 

jaisimha telugu movie nayanthara stillsjaisimha telugu movie nayanthara stills
nayanthara jaisimha movie stillsnayanthara jaisimha movie stills

இணையத்தில் வைரலாகும் நயன்தாராவின் புதிய புகைப்படம்


செய்தியாளர் பற்றி

மோகன், சிறு வயதிலிருந்தே அறிவாளியாக திகழும் இவர் கணிதத்தில் நன்கு திறமை வாய்ந்தவராவார். இவர் தனது திறமையால் பல பாராட்டுகளை பெற்றவர். கற்றல் மற்றும் கற்பித்தலில் வல்லவராக திகழும் இவர் மிகவும் பின்தங்கிய குழந்தைகளுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். ... மேலும் படிக்க

Mohan

மோகன்ராஜ்எழுத்தாளர்