Advertisement

கலெக்டரை தொடர்ந்து பத்திரிகை நிபுணராகும் நயன்தாரா

       பதிவு : Dec 10, 2017 15:15 IST    
nayanthara new movie updates nayanthara new movie updates
Advertisement

விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த சைத்தான் படத்தினை இயக்கியவர் பிரதீப் கிருஷ்ணமுர்த்தி. இந்த படத்தினை தொடர்ந்து சிபியின் நடிப்பில் நேற்று வெளியான சத்யா படத்தினையும் இயக்கியுள்ளார். இதற்கு அடுத்த படியாக நயன்தாராவை வைத்து ஒரு புதிய படத்தினை இயக்கவிருப்பதாக தகவல் வந்துள்ளது. 

பவன் குமார் இயக்கத்தில் கடந்த ஆண்டு கன்னட திரையுலகில் வெளிவந்து ஹிட் வெற்றியை பெற்ற 'யுடர்ன்' படத்தினை தற்பொழுது தமிழில் ரீமேக் செய்யவுள்ளனர். இந்த கன்னட படத்தில் நாயகியாக ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்திருந்தார். இவர் தமிழில் விக்ரம் வேதா மற்றும் சில நாட்களுக்கு முன்பு வெளிவந்த 'ரிச்சி' ஆகிய இரு படங்களிலும் நாயகியாக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ரத்தா இப்படத்தில் பத்திரிகை நிபுணர் வேடத்தில் நடித்திருந்தார்.    

 

இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் நயன்தாரா நடிக்கவுள்ளார். அறம் படத்தில் கலெக்டர் வேடத்தில் நடித்திருந்த நயன்தாரா இந்த படத்தில் பத்திரிகை நிபுணராக நடிக்கவுள்ளார். இதற்கு முன்னதாகவே தலைமகன் படத்தில் பத்திரிக்கை நிபுணர் வேடத்தில் நயன்தாரா நடித்திருப்பது குறிப்பிட்ட தக்கது.         
 


கலெக்டரை தொடர்ந்து பத்திரிகை நிபுணராகும் நயன்தாரா


செய்தியாளர் பற்றி

தங்கராஜா தற்போது தனது நிறுவனத்தில் மென்பொருள் துறையில் செயலாற்றி வருகிறார். இவர் அடிப்படையில் சிறந்த மென்பொருள் பொறியாளர். திரையரங்குகள் மற்றும் சினிமா துறை சார்ந்த நிறுவனங்களில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் வாய்ந்தவர். ... மேலும் படிக்க

rasu editor and writer

ராசுசெய்தியாளர்

Advertisement