ads

அறம் படத்திற்கு இப்படி ஒரு சோதனையா!..

aram movie new issue

aram movie new issue

 நயன்தாரா நடிப்பில் கோபி நயினார் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த 'அறம்' படத்திற்கு இன்றளவும் நல்ல வரவேற்புகள் கிடைத்து வருகிறது. இந்த படம் சமூக பிரச்சனையை சார்ந்ததாக இருப்பதால் ரசிகர்கள், விமர்சனங்கள், திரை துறை வட்டாரங்கள் என பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் படத்தின் இரண்டாம் பாகத்தையும் எடுப்பதற்கு படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இதில் முழு வேலை அரசியல் சார்ந்த படமாக இருக்கும் என்று கூறியுள்ளனர்.     

இந்நிலையில் கர்நாடகாவை சேர்ந்த தயாரிப்பாளர் மனோஜ் என்பவர் இது என்னோடைய 'பரிவாரா' படத்தின் கதை. என் படத்தை திருடி அறம் என்று பெயர் மாற்றி தமிழில் படமாக்கப்பட்டிருக்கிறது என்று சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்களை தொடர்ந்துள்ளார்.இந்த வழக்கு இன்னும் சில நாட்களில் விசாரணைக்கு வர உள்ளது.மேலும் இதற்கு இழப்பீடாக ரூபாய் 2 கோடி வழங்கவேண்டும் என்றும் கூறியுள்ளார்.   

இதற்கு முன்பு இயக்குனர் கோபி நயினார் கத்தி, மெட்ராஸ் போன்ற படங்கள் என்னுடைய படங்கள் என்று கூறியிருந்தார். தற்பொழுது அவரது படத்திற்கே இது போன்ற பிரச்சனைகள் வந்துள்ளது.   

அறம் படத்திற்கு இப்படி ஒரு சோதனையா!..