ads
வேலைக்காரன் இசை வெளியீட்டு தேதி
மோகன்ராஜ் (Author) Published Date : Nov 25, 2017 10:30 ISTபொழுதுபோக்கு
சிவகார்த்திகேயன் நடிப்பில் கிருஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளிவர உள்ள வேலைக்காரன் படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தில் சினேகா, ஆர்ஜே. பாலாஜி, தம்பி ராமையா, ரோகினி, சதிஷ், பிரகாஷ் ராஜ் உட்பட பலர் நடித்துள்ளனர். தனி ஒருவன் வெற்றியை தொடர்ந்து மோகன் ராஜா இப்படத்தினை இயக்கியுள்ளார்.
24 Am studios தயாரிப்பு நிறுவத்தின் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரித்துள்ள இந்த படத்தில் அனிருத் இசையமைத்துள்ளார். இவர் இசையில் வெளிவந்த 'கருத்தவன் எல்லாம் கலீஜாம்', 'இறைவா' என இரு பாடலுக்கும் நல்ல வரவேற்புகள் ரசிகர் மத்தியில் கிடைத்திருந்தது. இந்நிலையில் படத்தின் அனைத்து பாடல்களையும் டிசம்பர் 3ம் தேதி வெளியிடுவதாக படகுழுவினர் அதிகார பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருந்தனர்.
இந்நிலையில் அனிருத் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் 'கருத்தவன் எல்லாம் கலீஜாம்', 'இறைவா' என இரு பாடலுக்கும் நல்ல வரவேற்புகள் கொடுத்ததற்கு நன்றியை தெரிவித்திருந்தார். அதன் பின் டிசம்பர் 3ம் தேதி பாடல்கள் அனைத்தையும் வெளியிடுவதாக கூறியிருந்தார்.