ads
வேலைக்காரன் இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு
மீனா ஸ்ரீ (Author) Published Date : Nov 24, 2017 09:50 ISTபொழுதுபோக்கு
தனி ஒருவன் படத்தினை தொடர்ந்து மோகன் ராஜா இயக்கிவரும் வேலைக்காரன் படத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா இணைந்து நடித்துள்ளனர். 24 Am studios தயாரிப்பு நிறுவத்தின் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரித்துள்ள இப்படத்தில் சினேகா, ஆர்ஜே. பாலாஜி, தம்பி ராமையா, ரோகினி, சதிஷ், பிரகாஷ் ராஜ் இன்னும் சிலர் நடித்துள்ளனர்.
சிவகார்த்திகேயன் படம் என்றாலே வரவேற்புகள் அதிகரிக்கும் இந்நிலையில் நயன்தாராவும் இணைந்து நடிப்பதின் காரணத்தினால் வரவேற்புகளுடன் கூடிய எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது. இதனை அடுத்து அனிருத் இசையில் களமிறங்கி எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளார். இந்த படத்தில் இருந்து வெளிவந்த 'கருத்தவன் எல்லாம் கலீஜாம்', 'இறைவா' என இரு பாடல்களுக்கும் ரசிகர்களிடமிருந்து வரவேற்புகள் குவிந்த நிலையில் இருந்தது.
தற்பொழுது வந்த தகவலின் படி படத்தின் இசை வெளியீட்டு தேதியை இன்று மாலை 5 மணிக்கு வெளியிடுவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதன் காரணத்தினால் ரசிகர்கள் வெகுவான எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.