சீயான் விக்ரமின் புது பட தகவல்

       பதிவு : Jan 08, 2018 09:50 IST    
vikram new movie mahavir karna vikram new movie mahavir karna

கெளதம் மேனன் இயக்கத்தில் அதிரடி த்ரில்லர் படமான 'துருவ நட்சத்திரம்', விஜய் சந்தர் இயக்கத்தில் லோக்கல் கெட்டப்பில் 'ஸ்கெட்ச்' மற்றும் ஹரி இயக்கத்தில் 'சாமி ஸ்கோயர்' போன்ற படங்களில் பிசியாக விக்ரம் நடித்து வருகிறார். இதில் 'ஸ்கெட்ச்' படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்பொழுது போஸ்ட் ப்ரொடெக்சன் பணிகள் நடந்து வருகிறது.மேலும் இப்படத்தினை பொங்கல் விருந்தாக வெளியிட உள்ளனர். ஹரி இயக்கத்தில் 'சாமி ஸ்கொயர்' படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் துவங்கி தற்பொழுது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.    

இந்நிலையில் சீயான் விக்ரம் வரலாற்று சார்ந்த சரித்திர படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வந்துள்ளது. இந்த படத்தினை இயக்குனர் ஆர்.எஸ்.விமல்  இயக்கவுள்ளார். இவர் மலையாள திரையுலகில் சூப்பர் ஹிட் அடித்த 'என்னு நிண்டே மொய்தீன்’ படத்தினை இயக்கியிருப்பது குறிப்பிட்ட தக்கது.  நியூயார்க் நகரத்தை சேர்ந்த 'யுனைடெட் பிலிம் கிங்டம்' தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பிரமாண்டமாக எடுக்கப்பட உள்ள இப்படத்திற்கு ’மஹாவீர் கர்ணா' என்ற தலைப்பினை வைத்துள்ளனர். மேலும் இந்த படத்தின் மூலம் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரபல கலைஞர்களும் இணையவிருப்பதாக தகவல் வந்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் அக்டோபர் மாதத்தில் துவங்கவிருப்பதாகவும் படத்தினை அடுத்த ஆண்டு 2019-இல் டிசம்பரில் வெளியிடுவதாக படக்குழு முடிவு செய்துள்ளது . மேலும் 300 கோடி பட்ஜட்டில் எடுக்கவிருக்கும்  இப்படத்தினை ஹிந்தி மொழியில் உருவாக்கி பல மொழிகளில் வெளியிட உள்ளனர். இதற்கான அதிகாரபூர்வ தகவல் விரைவில் படக்குழு வெளியிடும்  என எதிர்பார்க்கப்படுகிறது.   

 

vikram new movie mahavir karnavikram new movie mahavir karna
vikram new movie mahavir karnavikram new movie mahavir karna

சீயான் விக்ரமின் புது பட தகவல்


செய்தியாளர் பற்றி

விஷுவல் மீடியா துறையை சேர்ந்த மீனா ஸ்ரீ எழுத்து மற்றும் கலை துறையில் ஆர்வமாக உள்ளார். மீனா, உலகம் முழுவதும் புதிய விஷயங்களைப் பற்றி கற்றுக் கொள்வதில் ஆர்வம் கொண்டவர். நமது கற்றலுக்கு தேவையான விஷயங்கள் அனைத்தும் நம்மை சுற்றியுள்ள உலகத்திலிருந்தே கிடைக்கும் என நினைப்பவர். மேலும் இவர் சினிமா மற்றும் திரைப்பட தொடர்பான செய்திகளை நேசித்து வருகிறார். ... மேலும் படிக்க

meena shree

மீனா ஸ்ரீஎழுத்தாளர்