மிஸ்டர் சந்திரமௌலி படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர்

       பதிவு : Jan 10, 2018 15:32 IST    
mr chadramouli first look coming soon mr chadramouli first look coming soon

'தீராத விளையாட்டு பிள்ளை', 'சமர்', 'நான் சிவப்பு மனிதன்' போன்ற படங்களை இயக்கிய திரு தற்பொழுது நவரச நாயகன் கார்த்திக் அவரது மகன் கெளதம் கார்த்திக் இணைத்து 'மிஸ்டர் சந்திரமௌலி' என்ற  படத்தினை இயக்கிவருகிறார். இந்த படத்தின் மூலம் முதல் முதலாக கார்த்திக் மற்றும் கெளதம் கார்த்திக் இணைந்து நடித்து வருகின்றனர். கிரியேட்டிவ் என்டர்டைனர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தனஞ்செயன் தயாரித்து வரும் இப்படத்தினை அதிகளவு பொருட்செலவில் பிரமாண்டமாக எடுத்து வருகின்றனர். இந்த படத்தின் மூலம் சில பிரபலங்கள் இணைந்திருப்பது குறிப்பிட்ட தக்கது. 

'விக்ரம் வேதா' புகழ் சாம்.சி.எஸ் இசையமைக்கும் இப்படத்தில் ரெஜினா, வரலக்ஷ்மி சரத்குமார் என இரு நாயகிகள் இணைந்துள்ளனர். மேலும் இவர்களுடன் இணைந்து இயக்குனர்கள் மஹேந்திரன் - அகத்தியன், சந்தோஷ் பிரசாத், சதிஷ் போன்றவர்கள் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். கடந்த நவம்பர் மாதம் 29ம் தேதியில் துவங்கப்பட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் டைட்டில் போஸ்டரை சில நாட்களுக்கு முன்பு நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார். இதனை தொடர்ந்து படக்குழு படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை மிக விரைவில் வெளியிட இருப்பதாக படத்தின் இயக்குனர் திரு அவரது டிவிட்டரில் பதிவு செய்து தகவலை வெளியிட்டுள்ளார். 

 


மிஸ்டர் சந்திரமௌலி படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர்


செய்தியாளர் பற்றி

அடிப்படையில் தேவி ஒரு ஓவியர் மற்றும் பயணங்களை மிகவும் ரசிப்பவர். இயற்கையின் மீதும் தனது எழுத்து திறமையின் மீதும் சிறந்த ஆர்வம் கொண்டவர். இவர் இயற்கை வளங்களையும், மலை சார்ந்த இடங்களையும் நிறையவே நேசிக்கிறார். இவர் தான் சேகரித்த பல்வேறு தகவல்களையும், எண்ணங்களையும் மக்களுக்கு கொண்டு சேர்ப்பவர். ... மேலும் படிக்க

Yasodha senior editor and writer

யசோதாமூத்த எழுத்தாளர்