ads

நாடோடிகள் 2 படத்தில் தேர்வான நாயகிகள்

nadodigal 2 movie heroines

nadodigal 2 movie heroines

நடிகர் மற்றும் இயக்குனரான சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் 2009ம் ஆண்டில் வெளிவந்த 'நாடோடிகள்' நட்புக்கு எடுத்து காட்டாக அமைந்து ரசிகர்கள் மத்தியிலும், வசூல் மற்றும் விமர்சன ரீதியிலும் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. இந்த படத்தில் விஜய் வசந்த், பரணி, அனன்யா, அபினயா,கஞ்சா கருப்பு உள்பட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தின் மூலம் இயக்குனர் சமுத்திரக்கனி, சசிகுமார் இருவரும் திரையுலகில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தனர். இதற்கு அடுத்த படியாக சமுத்திரக்கனி இயக்கிய 'போராளி' படத்தின் மூலம் இரண்டாவது முறையாக சசிகுமார் இணைந்து நடிப்பில் நல்ல வெற்றியை பெற்றிருந்தார்.

இந்நிலையில் சமுத்திரக்கனி - சசிகுமார் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளது. முதல் முறையாக இணைந்த நாடோடிகள் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கு சமுத்திரக்கனி முடிவுசெய்திருப்பதாகவும், இந்த இரண்டாம் பாகத்திலும் நாயகனாக சசிகுமார் நடிக்க இருப்பதாகவும் தகவல் முன்பே வெளிவந்தது. இந்நிலையில் இப்படத்தின் நாயகி பட்டியலை வெளியிட்டுள்ளனர். இதில் அஞ்சலி மற்றும் 'காதல் கண் கட்டுதே' படத்தின் மூலம் அறிமுகமான அதுல்யா என இரு நாயகிகள் ஒப்பந்தமாகி இருப்பதாக படக்குழு தகவலை வெளியிட்டுள்ளது. ‘இன்ஸ்பைர் எண்டர்டெயின்மெண்ட்’ தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து சமுத்திரக்கனிக்கு சொந்தமான ‘நாடோடிகள் புரொடக்ஷன்ஸ்' தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் சமுத்திரக்கனி தயாரிக்கவுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பொங்கல் விருந்தாக வெளியிட்டு படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளனர். மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதத்தில் துவங்கவிருப்பதாக தெரிவித்துள்ளனர்.    

 

nadodigal 2 movie first look posternadodigal 2 movie first look poster

நாடோடிகள் 2 படத்தில் தேர்வான நாயகிகள்