ஐஸ்வர்யாவின் சொல்லிவிடவா படத்தின் ட்ரைலர்

       பதிவு : Jan 06, 2018 12:05 IST    
sollividava movie official trailer sollividava movie official trailer

விஷால் நடிப்பில் கடந்த 2013ம் ஆண்டில் வெளிவந்த 'பட்டத்து யானை' படத்தின் மூலம் 'ஆக்சன் கிங்' அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா நாயகியாக திரையுலகில் அறிமுகமானார். அதனை அடுத்து  அர்ஜுன் தற்பொழுது தயாரித்து இயக்கிவரும் 'சொல்லிவிடவா' என்ற படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தில் ஐஸ்வர்யாவிற்கு ஜோடியாக கன்னட திரைப்பட நாயகன் சந்திரன் குமார் இணைந்துள்ளார். மேலும் இவர்களுடன் இயக்குநர் கே.விஸ்வநாத், சுஹாஷினி மணிரத்னம், பிரகாஷ்ராஜ், மொட்ட ராஜேந்திரன், மனோபாலா, சதீஷ், யோகி பாபு, ப்ளாக் பாண்டி, போண்டா மணி உட்பட திரையுலக வட்டாரமே இணைந்து நடித்துள்ளனர். 

அர்ஜுனுக்கு சொந்தமான ‘ஸ்ரீ ராம் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல்’தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் அர்ஜுன் தயாரித்து வரும் இப்படத்தில் ஜெஸ்ஸி கிஃப்ட் இசையமைத்துள்ளார். மேலும் ஹெச்.சி.வேணுகோபால் ஒளிப்பதிவு பணிகளில் ஈடுபடுகிறார். இப்படத்தினை கன்னடத்தில் 'பிரேமா தர்ஹா' என்ற தலைப்பில் வெளியிட உள்ளனர். சில நாட்களுக்கு முன்பு இயக்குனர்  ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட இப்படத்தின் டீசரை தொடர்ந்து தமிழ், கன்னடத்தில் வெளிவந்த  இசை வெளியீடு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் படத்தின் ட்ரைலரை விரைவில் வெளியிடுவதாக படக்குழு தகவலை வெளியிட்டுள்ளது. 

 

sollividava movie official trailersollividava movie official trailer

ஐஸ்வர்யாவின் சொல்லிவிடவா படத்தின் ட்ரைலர்


செய்தியாளர் பற்றி

தங்கராஜா தற்போது தனது நிறுவனத்தில் மென்பொருள் துறையில் செயலாற்றி வருகிறார். இவர் அடிப்படையில் சிறந்த மென்பொருள் பொறியாளர். திரையரங்குகள் மற்றும் சினிமா துறை சார்ந்த நிறுவனங்களில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் வாய்ந்தவர். ... மேலும் படிக்க

rasu editor and writer

தங்கராஜாசெய்தியாளர்