ads

மாணவர்களுக்கு இலவசமாக திரையிடவுள்ள வேலைக்காரன் படக்குழு

velaikkaran movie to be screened free of cost for school students

velaikkaran movie to be screened free of cost for school students

இயக்குனர்  மோகன் ராஜா இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்துள்ள படம் 'வேலைக்காரன்'. இந்த படம் தற்போதுவரை திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது. இந்த படத்தில் இயக்குனர் மோகன் ராஜா சமூகத்தில் உணவு பிரச்சனைகளின் முக்கியத்துவத்தை அழுத்தமாக பதிவு செய்துள்ளார். தற்போது வரை இந்த படத்திற்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, இந்த படத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட உணவு பிரச்சனையின் ஆழத்தையும் முக்கியத்துவத்தையும் மாணவர்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் ஆசிரியர்களின் வலியுறுத்தலுக்கு ஏற்ப இந்த படத்தின் சில காட்சிகளை நீக்கிவிட்டு இலவசமாக திரையரங்குகளில் அடுத்த மாதம் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் பிப்ரவரி 15-ஆம் தேதி வரை முடிவு செய்துள்ளதாக வேலைக்காரன் படத்தின் தயாரிப்பு நிறுவனமான '24AM ஸ்டுடியோஸ்' தனது டிவிட்டரில்  தெரிவித்துள்ளது.

மாணவர்களுக்கு இலவசமாக திரையிடவுள்ள வேலைக்காரன் படக்குழு