மாயா படத்தினை அடுத்து ஆரி நடிக்கும் சஸ்பென்ஸ் த்ரில்லர்

       பதிவு : Nov 05, 2017 07:19 IST    
மாயா படத்தினை அடுத்து ஆரி நடிக்கும் சஸ்பென்ஸ் த்ரில்லர்

'ஆடும் கூத்து' படத்தின் மூலம் அறிமுகமான ஆரி அதன் பிறகு ரெட்டை சுழி, நெடுஞ்சாலை, மாயா போன்ற படங்களை தொடர்ந்து 'மௌனவலை' படத்தில் தற்பொழுது நடித்து வருகிறார். களம் படத்தினை இயக்கிய ராபர்ட் இப்படத்தினை இயக்கி வருகிறார். இந்த படத்தின் பூஜை நேற்று நடைபெற்று படப்பிடிப்பு வேலைகளும் நடந்து வருகிறது.  

மாயா படத்தினை அடுத்து ஆரிக்கு சஸ்பென்ஸ் த்ரில்லராக உருவாக்க உள்ள இப்படத்தில், ஸ்மிருதி நாயகியாக நடிக்க இருக்கிறார். மதுசூதனன், அருள் ஜோதி, அரிஸ்பேடி, உப்பசனா போன்றவர்கள் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளனர். கார்த்திக் சந்திரன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பாருக் பாஷா ஒளிப்பதிவும், ஜாவித் ரியாஸ் இசையமைப்பு பணியில் இணைந்துள்ளனர்.  

 

எஸ் ராஜசேகர் தயாரிக்கும் இப்படத்தின் தலைப்பினை போன்று, ஒரு துடிப்புள்ள இளைஞர் வாழ்க்கையில் எப்போதும் போன்று காதல், கல்லூரி என்ற சுதந்திரமான வாழ்க்கையை வாழ்ந்து வரும் போது அவனே அறியாமல் ஒரு வலையில் பின்னி சுற்றப்படுகிறான். இறுதியில் அதை பிரித்து கொண்டு அந்த வலையில் இருந்து வெளிவரும் சுவாரிஸ்யமான நிகழ்வு படத்தின் மையக்கருத்து.   


மாயா படத்தினை அடுத்து ஆரி நடிக்கும் சஸ்பென்ஸ் த்ரில்லர்


செய்தியாளர் பற்றி

மோகன், சிறு வயதிலிருந்தே அறிவாளியாக திகழும் இவர் கணிதத்தில் நன்கு திறமை வாய்ந்தவராவார். இவர் தனது திறமையால் பல பாராட்டுகளை பெற்றவர். கற்றல் மற்றும் கற்பித்தலில் வல்லவராக திகழும் இவர் மிகவும் பின்தங்கிய குழந்தைகளுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். ... மேலும் படிக்க

Mohan

மோகன்ராஜ்எழுத்தாளர்