ads

கமல்ஹாசனின் இந்தியன் 2வில் இணைந்த அஜய் தேவ்கன்

Bollywood Actor Ajay Devgn Joining the cast of Kamal Haasan Indian 2 Movie

Bollywood Actor Ajay Devgn Joining the cast of Kamal Haasan Indian 2 Movie

நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் கடந்த 1996-ஆம் ஆண்டு வெளிவந்த படம் 'இந்தியன்'. இந்த படத்தில்  அநீதிக்கும் ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கும் மனிதராக கமல் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து மாபெரும் வெற்றி பெற்றது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த படத்தையும் இயக்குனர் இயக்க உள்ளார். தற்போது அரசியல் களத்தில் களமிறங்கியுள்ள கமலுக்கு இந்த படம் பக்க பலமாக இருக்கும் என ரசிகர்கள் மத்தியில் கூறப்படுகிறது. சமீபத்தில் இந்த படத்தின் கதையை முடித்து பணிபுரியவுள்ள நடிகர் நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்க உள்ளார்.

காமெடி நடிகராக வடிவேலு தேர்வாகியுள்ளதாக தகவல் வெளியாகிறது. இந்நிலையில் தற்போது இந்த படத்தில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிடும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் அரசியல் மற்றும் வங்கிகளில் தொழிலதிபர்கள் நடத்தும் மோசடி போன்றவையை அடிப்படையாக கொண்டு உருவாக உள்ளது.

'2.0' படத்தை தொடர்ந்து இந்த படத்தையும் லைக்கா ப்ரொடக்சன் நிறுவனம் தயாரிக்க உள்ளது. முன்னதாக சூப்பர் ஸ்டார் நடிப்பில் உருவாகியுள்ள '2.0' படத்தில் வில்லனாக நடிகர் அக்ஷய் குமாரை சங்கர் நடிக்க வைத்துள்ளார். தற்போது தனது அடுத்த படமான 'இந்தியன் 2' வில் நடிகர் அஜய் தேவ்கனை தமிழ் திரையுலகிற்கு அறிமுகபடுத்தவுள்ளார். மேலும் தற்போது அரசியலில் 'மக்கள் நீதி மய்யம்' என்ற கட்சியை துவங்கிய கமல்ஹாசன் விஸ்வரூபம் 2, இந்தியன் 2, சபாஷ் நாயுடு போன்ற படங்களுக்கு பிறகு தீவிரமாக அரசியலில் கவனம் செலுத்த உள்ளார்.

கமல்ஹாசனின் இந்தியன் 2வில் இணைந்த அஜய் தேவ்கன்