ads

எம்ஐடி ஆலோசகர் பதவிக்கு நடிகர் அஜித் கேட்ட சம்பளம்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆலோசகராக அஜித்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆலோசகராக அஜித்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

நடிகர் அஜித் குமார் நடிப்பது மட்டுமல்லாமல் நிஜ உலகில் ரேசர், பைலட், கார் மற்றும் விமான வடிவமைப்பாளர் போன்ற பல திறமைகளை கொண்டுள்ளார். இவர் பல ட்ரான் ஹெலிகாப்டரை வடிவமைத்து அதில் வெற்றி கண்டுள்ளார். இந்நிலையில் சென்னை அண்ணா பல்கலைகழகத்தின் சோதனை பைலட்டாகவும் ஆலோசகராகவும் அஜித் நியமிக்கப்பட்டுள்ளார். வரும் செப்டம்பர் மாதத்தில் ஆஸ்திரேலியாவில் உள்ள குயீன்ஸ்லாந்தில் ஆளில்லா விமானம் தொடர்பான போட்டிகள் நடைபெற உள்ளது.

இதில் சென்னை அண்ணா பல்கலைகழகத்தின் ஐஐடி மாணவர்களும் பங்கேற்கின்றனர். இதற்காக ஐஐடி மாணவர்கள் ட்ரோன் ஹெலிகாப்டரை ஒன்றை உருவாக்கி வருகின்றனர். இந்த குழுவின் ஆலோசகராகவும் சோதனை பைலட்டாகவும் அஜித் நியமிக்கப்பட்டுள்ளார். சினிமா துறையில் கோடி கணக்கில் சம்பளம் வாங்கும் இவர் இந்த பயிற்சிக்காக 1000 ரூபாய் மட்டுமே கேட்டுள்ளார். இதனையும் ஏழை மக்களின் கல்விக்கு உபயோகப்டுத்துமாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து விண்வெளி துறையின் பேராசிரியர் மற்றும் இயக்குனர் செந்தில்குமார் கூறுகையில் "ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு வருடமும் ஆளில்லா விமானம் சார்ந்த போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகளை அரசு மற்றும் தனியார் அமைப்புகள் இணைந்து நடத்தி வருகின்றன. இந்த போட்டியில் 100க்கும் அதிகமான நாடுகளில் இருந்து போட்டியாளர்கள் வருகை புரிகின்றனர். ஆனால் இந்த போட்டியில் கலந்து கொள்பவர்களின் 55 சதவீத போட்டியாளர்கள் மட்டுமே இரண்டாவது சுற்றுக்கு முன்னேறுவார்கள். இந்த போட்டி மருத்துவ துறைக்கு உதவும் விதமாக நடைபெறுகிறது. ஒரு சோதனை கூடம் ஒன்றிலிருந்து நோயாளி ஒருவரின் ரத்த மாதிரியை மற்றொரு சோதனை கூடத்திற்கு ஆளில்லா விமானம் மூலம் எடுத்து செல்ல வேண்டும். இதற்கு நடிகர் அஜித்தின் திறமையும், அவரின் அனுப்பவும் உதவியாக இருக்கும் என நம்புகிறோம்" என்று அவர் தெரிவித்துள்ளார். 

எம்ஐடி ஆலோசகர் பதவிக்கு நடிகர் அஜித் கேட்ட சம்பளம்