அஜித் சார் எனக்கு உதவினார் - இயக்குனர் சுசீந்திரன்

       பதிவு : May 01, 2018 15:25 IST    
அஜித் பிறந்த நாளில் சுசீந்திரன் ரசிகர்களுக்கு முக்கிய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அஜித் பிறந்த நாளில் சுசீந்திரன் ரசிகர்களுக்கு முக்கிய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

இன்று தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு ஏராளமான ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் அனைவரும் உழைப்பாளர் தினம் கூறியும் பிறந்த நாள் வாழ்த்துகளையும் தெரிவித்த வண்ணம் உள்ளனர். இப்படி அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் போது இயக்குனர் சுசீந்திரன், தல அஜித்தின் பிறந்த நாளில் அவரை பற்றிய உன்னதமான தகவல் ஒன்றை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் "நான் உதவி இயக்குனராக பணியாற்றி கொண்டிருக்கும் போது எனது நண்பர் உதவி இயக்குனர் ரோஜா ரமணன் சிறுநீரக கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தான். அவனது சிகிச்சைக்கு 3 லட்சம் ருபாய் பணம் தேவைப்பட்டது, நானும் எனது நண்பர்களும் இணைந்து சினிமா துறையில் உள்ள அனைவரிடமும் பண உதவி பெற்றோம்.. அப்போது தான் முதன் முதலில் ஜனா படப்பிடிப்பின் போது அஜித் சாரை சந்தித்தேன்..அப்பொது ரோஜாரமனின் நிலையை கூறினேன்..அப்போதே முகம் தெரியாத சக தொழிலாளிக்கு அதிக பணம் கொடுத்து உதவியவர் அஜித் சார் தான். அன்று முதல் அஜித் சார் மேல் எனக்கு பெரிய மரியாதை உண்டு..அஜித் சாருக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.." என்று அவர் பதிவு செய்துள்ளார். 

 


அஜித் சார் எனக்கு உதவினார் - இயக்குனர் சுசீந்திரன்


செய்தியாளர் பற்றி

விக்னேஷ் சுற்றுப்புற சுகாதாரம் மற்றும் கல்வி சார்ந்த செய்திகளை பெருமளவு எழுதி வருகிறார். இவர் தனது செய்திகளில் கற்பனை திறனையும், புது புது தகவல்களையும் வெளிப்படுத்தி வருகிறார். இவர் செய்திகளை எழுதுவதில் வல்லவர். தனது திறமையால் சிறு தகவல்களை வைத்து அதன் மூலம் நம்மால் ஈன்ற அளவுக்கு தனது முயற்சிகளை வெளிப்படுத்துவார். அனைவரிடத்திலும் வெளிப்படையாக பழக கூடியவர். மற்றவர்களிடமிருந்து புது நுணுக்கங்களையும் நுட்பத்தையும் சேகரித்து தன்னுடைய அறிவை வளர்த்து கொள்வார். இவர் தான் சேகரிக்கும் தகவல்களை மிகவும் எளிமையான முறையில் மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் சிறப்பானதாக விளங்குகிறார். ... மேலும் படிக்க

Vignesh writer and reporter

விக்னேஷ்செய்தியாளர்