ads

தல பிறந்தநாளில் செம்ம வெய்ட்டா களமிறங்குகிறார் சூப்பர் ஸ்டார்

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள காலா படத்தின் செம்ம வெயிட்டு என்ற பாடலின் பர்ஸ்ட் சிங்கிள் நாளை வெளியாகவுள்ளது.

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள காலா படத்தின் செம்ம வெயிட்டு என்ற பாடலின் பர்ஸ்ட் சிங்கிள் நாளை வெளியாகவுள்ளது.

சூப்பர் ஸ்டார் நடிப்பில் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் கபாலி படத்திற்கு பிறகு உருவாகியுள்ள படம் 'காலா'. இந்த படம் வரும் ஜூன் 7-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. நடிகர் தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை லைக்கா ப்ரொடக்சன் நிறுவனம் பிரமாண்டமாக வெளியிட உள்ளது. முன்னதாக படக்குழு இந்த படத்தின் டீசரை வெளியிட்டது. பொதுவாக சூப்பர் ஸ்டார் படம் என்றாலே அவரது கருத்துக்களும், அதிரடி பன்ச்களும் ரசிகர்களும் பிரபலமடையும்.

அந்த வகையில் சமீபத்தில் வெளியான டீசரில் 'க்யா ரே..' மற்றும் 'வேங்கை மவன் ஒத்தையில நிக்கன்..' போன்ற வசனங்கள் தற்போது பொது மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. இந்த படத்தின் டீசரை தொடர்ந்து நாளை மே 1இல் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் 'செம வெய்ட்டு' என்று தொடங்கும் பாடலின் பர்ஸ்ட் சிங்கிளை வெளியிட உள்ளனர். இதற்காக தற்போது '#SemmaWeightu' என்ற டேக்கும் டிவிட்டரில் பிரபலமாகி வருகிறது. மேலும் நாளை தல அஜித் பிறந்த நாள் என்பதால் அவருடைய ரசிகர்கள் 25 நாட்களுக்கு முன்பிருந்தே ஆர்வமாக காத்து கொண்டிருக்கின்றனர். நாளை அஜித் பிறந்த நாளில் தல நடிப்பில் வெளியான படங்கள் ரசிகர்களுக்காக காண்பிக்கப்பட்ட உள்ளது.  

தல பிறந்தநாளில் செம்ம வெய்ட்டா களமிறங்குகிறார் சூப்பர் ஸ்டார்