ads

கார்த்திக் சுப்பராஜ் சூப்பர் ஸ்டாருடன் இணைந்த விஜய் சேதுபதி அதிகாரபூர்வ அறிவிப்பு

ரஜினிகாந்த் படத்தில் விஜய் சேதுபதி இணைந்துள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்த் படத்தில் விஜய் சேதுபதி இணைந்துள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது காலா படம் வரும் ஜூன் 7-ஆம் தேதியில் வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு பிறகு இயக்குனர் சங்கரின் பிரமாண்ட படமான '2.0' வெளியாக உள்ளது. ஆனால் இன்னும் இந்த படம் குறித்த எந்த அறிவிப்பும் வெளியாக வில்லை. இப்படி அரசியல், சினிமா என இரு துறைகளிலும் கவனம் செலுத்தி வரும் ரஜினிகாந்த் அடுத்ததாக இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்க உள்ளது.

இந்த படத்தின் இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சமீபத்தில் படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டது. இதன் பிறகு இந்த படத்தில் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக முன்னதாக தகவல் வெளியானது. விஜய் சேதுபதி கார்த்திக் சுப்பராஜுடன் இணைந்து பிட்சா மற்றும் இறைவி போன்ற படங்களில் பணியாற்றியுள்ளார். இதன் பிறகு கார்த்திக் சுப்பராஜ் அடுத்ததாக இயக்க உள்ள இந்த படத்திலும் விஜய் சேதுபதி ரஜினிகாந்துக்கு வில்லனாக, தம்பியாக நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது.

தற்போது இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. கார்த்திக் சுப்பராஜ், ரஜினிகாந்த் கூட்டணியில் விஜய் சேதுபதி இணைந்துள்ளதாக சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நடிகர் விஜய் சேதுபதிக்கு, சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற கனவு இருப்பதாக ஒரு நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார். தற்போது இவருடைய கனவு நிறைவேறியுள்ளது. இந்த அறிவிப்பு வெளியான பிறகு ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

கார்த்திக் சுப்பராஜ் சூப்பர் ஸ்டாருடன் இணைந்த விஜய் சேதுபதி அதிகாரபூர்வ அறிவிப்பு