ads
விஜய் சேதுபதி நடித்த வில்லன் கதாபாத்திரத்தில் தயாரிப்பாளர் இந்தேர் குமார்
வேலுசாமி (Author) Published Date : Apr 26, 2018 11:36 ISTபொழுதுபோக்கு
நடிகர் மற்றும் தயாரிப்பாளரான இந்தேர் குமார் தமிழ் திரையுலகில் தயாரிப்பாளராக நடிகர் அருண் விஜயின் 'குற்றம் 23' படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து அருண் விஜய் நடிப்பில் 'குற்றம் 23' படத்திற்கு பிறகு தற்போது உருவாகி வரும் படத்தையும் தயாரிப்பாளர் இந்தேர் குமார் தயாரித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். ஒரு தயாரிப்பாளரான இவர் ஒரு நடிகராகவும் சசிகுமார் நடிப்பில் வெளியான 'கொடி வீரன்' படத்தில் அறிமுகமானார். இந்த படத்திற்கு பிறகு தற்போது இவர் மீண்டும் சசிகுமார் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார்.
கடந்த 2012இல் இயக்குனர் பிரபாகரன் இயக்கத்தில் வெளியான 'சுந்தரபாண்டியன்' படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க படக்குழு முடிவு செய்துள்ளது. இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த வில்லன் கதாபாத்திரத்தில் தான் தயாரிப்பாளர் இந்தேர் குமார் நடிக்க உள்ளார். இது குறித்து இந்தேர் குமார் கூறுகையில் "என்னுடைய கனவு சினிமா துறையில் தயாரிப்பாளர் ஆக வேண்டும் என்பது தான். இதன் படி அருண் விஜயின் குற்றம் 23 படத்தை தயாரித்தேன்.
தற்போது மீண்டும் அவர் நடிப்பில் உருவாகி வரும் தடம் படத்தையும் தயாரித்து வருகிறேன். தற்போது ரசிகர்கள் நல்ல கதையை தான் விரும்புகிறார்கள். அப்படி அமைந்த படம் தான் குற்றம் 23, தடம். தடம் படம் சிறப்பாக உருவாகி வருகிறது. இந்த படம் நிச்சயம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும். இயக்குனர் சசிகுமார் 'கொடி வீரன்' படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நான் நடித்தால் நல்லா இருக்கும் என இயக்குனர் முத்தையாவிடம் தெரிவித்துள்ளார். அதன்படி தான் கொடிவீரன் படத்தில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.
நானும் சசிகுமாரும் கொடிவீரன் படப்பிடிப்பில் இருந்த போது இயக்குனர் எஸ் ஆர் பிரபாகரன் ஒரு நல்ல கதையை சொன்னார். அந்த கதை அனைவருக்கும் பிடித்திருந்தது. பிறகு தான் இந்த படத்தை தயாரிக்க முடிவு செய்தேன். தயாரிப்பது மட்டுமல்லாமல் இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரமான வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். எனக்கு கொடிவீரன் படம் நல்ல கிராமத்து அனுபவத்தை கொடுத்தது. இதனை அடுத்து 'சுந்தரபாண்டியன் 2' படமும் எனக்கு சிறந்த அனுபவமாக இருக்கும் என நம்புகிறேன்." என அவர் தெரிவித்துள்ளார்.