சசிகுமாரின் அசுரவாதம் டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

       பதிவு : Mar 07, 2018 17:49 IST    
இயக்குனர் கவுதம் மேனன் சசிகுமாரின் அசுரவதம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் டீசரையும் வெளியிட உள்ளார். இயக்குனர் கவுதம் மேனன் சசிகுமாரின் அசுரவதம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் டீசரையும் வெளியிட உள்ளார்.

நடிகர் மற்றும் இயக்குனருமான சசிகுமார் நடிப்பில் இறுதியாக 'கொடி வீரன்' படம் வெளியானது. இந்த படத்தை குட்டிப்புலி, கொம்பன் படத்தை இயக்கிய முத்தையா இயக்கியிருந்தார். இதனை தொடர்ந்து சசிகுமார் நடிப்பில் 'அசுரவதம்' படம் உருவாகி வருகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்சன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியானது. நடிகர் சசிகுமார், தனுஷ் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளார்.

 

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும், டீசரையும் இயக்குனர் கவுதம் மேனன் இன்று வெளியிடுவதாக படக்குழு நேற்று தெரிவித்தது. அதன் படி தற்போது 5 மணியளவில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதன் பிறகு இந்த படத்தின் டீசரை இரவு 7 மணிக்கு இயக்குனர் கவுதம் மேனன் வெளியிட உள்ளார். இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக 'அட்டகத்தி' நந்திதா நடித்துள்ளார்.

இந்த படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் லீனா லலித்குமார் தயாரித்துள்ளார். இந்த படம் அடுத்த மாதம் ஏப்ரல் 13-இல் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியாக உள்ளது. இதே நாளில் நடிகர் பிரபு தேவா மற்றும் கார்த்திக் சுப்பராஜின் சைலன்ட் த்ரில்லர் படமான 'மெர்குரி' படம் வெளியாக உள்ளது. 

 


சசிகுமாரின் அசுரவாதம் டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்