ads

சசிகுமாரின் அசுரவதம் படத்தின் வெளியீடு தேதி அறிவிப்பு

Director Sasikumar new movie Asuravadham released on coming April 13th

Director Sasikumar new movie Asuravadham released on coming April 13th

நடிகர் மற்றும் இயக்குனருமான சசிகுமார் நடிப்பில் ‘கொடிவீரன்’ கடந்த ஆண்டு டிசம்பர்  மாதம் வெளியானது. இந்த படத்தை தொடர்ந்து சசிகுமார் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் 'அசுரவாதம்'.

இந்த படத்தை பாபி சிம்ஹாவின் ‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’ என்ற படத்தை இயக்கிய இயக்குனர் எம் மருதுபாண்டியன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக 'அட்டகத்தி' நந்திதா நடித்துள்ளார்.

இந்த படத்திற்கு எஸ்ஆர் கதிர் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள இந்த படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் லீனா லலித்குமார் தயாரித்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்புகளும் நிறைவடைந்ததாக படக்குழு சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டது.

இதன் பிறகு இந்த படத்தின் போஸ்ட் ப்ரொடக்சன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தை தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வரும் ஏப்ரல் 13ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகிறது. மேலும் விரைவில் இந்த படத்தின் இசை மற்றும் ட்ரைலரை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சசிகுமாரின் அசுரவதம் படத்தின் வெளியீடு தேதி அறிவிப்பு