ads

கார்த்திக் சுப்பராஜின் மெர்குரி படத்தை பாராட்டிய சூப்பர் ஸ்டார்

நடிகர் பிரபு தேவா நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள மெர்குரி படத்தை ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.

நடிகர் பிரபு தேவா நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள மெர்குரி படத்தை ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.

இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் பிரபு தேவா நடிப்பில் ஏப்ரல் 13-இல் உலகம் முழுவதும் வெளியான சைலன்ட் த்ரில்லர் படம் 'மெர்குரி'. இந்த படம் உலகம் முழுவதும் நல்ல வசூலையும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினையும் பெற்று வருகிறது. இந்திய திரையுலகில் புதுவித முயற்சியாக உருவான இந்த படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது. ஆனால் தமிழகத்தில் தயாரிப்பாளர் வேலை நிறுத்தத்தால் இந்த படம் ஒரு வாரம் கழித்தே வெளியானது.

ஆனால் தமிழில் தமிழ் ராக்கர்ஸ் போன்ற இணையதளத்தில் உலகம் முழுவதும் வெளியான ஏப்ரல் 13-ஆம் தேதியே வெளியாகி விட்டது. இதனால் படக்குழு அதிர்ச்சி அடைந்து இணையத்தில் பார்க்க வேண்டாம் என ரசிகர்களை வலியுறுத்தி வந்தது. இதன் பிறகு தயாரிப்பாளர் பிரச்சனை முடிவடைந்த பிறகு கடந்த 20-ஆம் தேதி தமிழகம் முழுவதும் 'மெர்குரி' வெளியாகியுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு வெளியான முதல் படம் என்பதால் தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.

கூட்டத்திற்கு தகுந்தாற்போல் தமிழகத்திலும் இந்த படம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் படக்குழுவினரை பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் தற்போது இந்த படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பார்த்து, படக்குழுவினரை பாராட்டியுள்ளார். இதற்கான புகைப்படத்தை நடிகர் பிரபுதேவாவும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜும் வெளியீட்டு நன்றி தலைவா என மகிழ்ந்துள்ளனர். ரஜினிகாந்த் அடுத்ததாக இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

கார்த்திக் சுப்பராஜின் மெர்குரி படத்தை பாராட்டிய சூப்பர் ஸ்டார்