ads
மெர்குரி படத்தை தமிழராக்கர்ஸ் இணையதளத்தில் பார்க்க வேண்டாம் என பிரபுதேவா கோரிக்கை
வேலுசாமி (Author) Published Date : Apr 15, 2018 19:48 ISTபொழுதுபோக்கு
இயக்குனர் கார்த்திக் சூப்பராஜ் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் 13- இல் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்று வரும் படம் 'மெர்குரி'. இந்த படத்திற்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஆனால் கடந்த 13-ஆம் தேதி தமிழ் மொழியை தவிர தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம், ஜெர்மனி, பிரென்ச் போன்ற மொழி திரையரங்குகளில் வெளியானது. இதற்கு இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ், தமிழ் மொழியில் வெளியாகாமல் போனதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.
தற்போது தமிழகத்தில் நிகழ்ந்து வரும் தயாரிப்பாளர் வேலைநிறுத்தம் எப்போது முடியும் என்று தெரியாமல் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் வெளியாகாமல் இருக்கும் புதிய படங்கள் இதர மாநிலங்களில் வெளியாகி வருகிறது. ஆனால் நிகழ்ந்து வரும் தயாரிப்பாளர் பிரச்னை காரணமாக இதர மாநில திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்கள் தமிழ் ராக்கர்ஸ் போன்ற இணையதளத்தில் வெளியாகி வருகிறது. தொடர்ந்து தயாரிப்பாளர் பிரச்னை நீடித்தால் திருட்டு விசிடி போன்றவற்றின் ஆதிக்கம் அதிகமாக வாய்ப்புள்ளது.
இந்நிலையில் தற்போது வெளியான 'மெர்குரி' படமும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம், ஜெர்மனி, பிரென்ச் போன்ற மொழிகளில் திருட்டுத்தனமாக இணையதளத்தில் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மெர்குரி படம் வெளியாகாததால் ரசிகர்கள் இணையதளத்தில் பார்த்து வருகின்றனர். தற்போது இந்த படத்தின் நாயகன் பிரபு தேவா இணையதளத்தில் பார்ப்பதை ரசிகர்கள் தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தி சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
The suspense of #Mercury is best watched on the big screen. Please don't watch pirated versions.. Our humble request 🙂#SayNoToPiracy @karthiksubbaraj pic.twitter.com/Z595MNPQxc
— Prabhudheva (@PDdancing) April 15, 2018