ads

அதர்வாவுடன் இணையும் 'இவன் தந்திரன்' இயக்குனர்

atharvaa joined director R kannan new movie

atharvaa joined director R kannan new movie

ஆர்.கண்ணன் இயக்கத்தில் கெளதம் கார்த்திக் நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற படம் 'இவன் தந்திரன்'. இந்த படத்தின் மூலம் கெளதம் கார்த்திக் ரசிகர்களிடமும், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியிலும் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தார். இந்நிலையில் இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கவிருக்கும் புது படத்தின் தகவல்  வெளிவந்துள்ளது. அதில் நாயகனாக அதர்வா நடிப்பதாகவும் இவருக்கு ஜோடியாக 'என்னை நோக்கி பாயும் தோட்டா' நாயகி மேகா ஆகாஷ் இணைவதகாவும் தகவல் வந்துள்ளது.  

'MKRP புரொடக்ஷன்ஸ்’ தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து இயக்குனர் ஆர்.கண்ணனனுக்கு  சொந்தமான ‘மசாலா பிக்ஸ்’ தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்கவுள்ள இப்படத்தில் ரதன் இசையமைக்க உள்ளார். இவர் ‘அர்ஜுன் ரெட்டி’ படத்திற்கு இசையமைத்திருப்பது குறிப்பிட்ட தக்கது. மேலும் இந்த படத்தில் பிரசன்னா.எஸ்.குமார் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார்.  

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு  ஜனவரி 19ல் துவங்கவிருப்பதாகவும் தற்பொழுது படத்தின்  ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வந்துள்ளது. மேலும் படத்தில் இணையவிருக்கும் தொழில் நுட்ப கலைஞர்கள், இதர நடிகர் - நடிகைகளின் பட்டியல் தகவல் விரைவில் வெளியிட உள்ளனர்.   

அதர்வாவுடன் இணையும் 'இவன் தந்திரன்' இயக்குனர்