நடிகர் இமான் அண்ணாச்சியின் தாயார் இன்று காலமானார்

       பதிவு : Nov 01, 2017 15:56 IST    
நடிகர் இமான் அண்ணாச்சியின் தாயார் இன்று காலமானார்

காதல் படத்தில் மூலம் திரையுலகில் கால்பதித்த இமான் அண்ணாச்சி காமெடி நடிகராக கோலிசோடா, ஜில்லா, காக்கிசட்டை, தொடரி உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவரது பேச்சு திறமை மக்களிடையே மிகவும் பிரபலமானது. இவர் ஏராளமான நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும், குட்டி சுட்டிஸ், சொல்லுங்கன்னே சொல்லுங்க போன்ற பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக வலம் வந்துள்ளார்.

இவருடைய தாயார் திருமதி கமலா அன்னம் இன்று காலமானார். இவருடைய இறுதி சடங்குகள் இவருடைய சொந்த ஊரான தூத்துக்குடியில் நாளை நடக்கவுள்ளது. சமூக வலைத்தளங்களில் இமான் அண்ணாச்சிக்கு ரசிகர்கள் மற்றும் திரைப்பட துறையினர் அவருக்கு ஆறுதல்களையும் அனுதாபங்களையும் பகிர்ந்து வருகின்றனர்.

 


நடிகர் இமான் அண்ணாச்சியின் தாயார் இன்று காலமானார்


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்