ads
நடிகர் கமல்ஹாசனை சந்தித்த உலக புகழ் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன்
வேலுசாமி (Author) Published Date : Mar 31, 2018 11:35 ISTபொழுதுபோக்கு
நேற்று மும்பையில் பிலிம் ஹரிட்டேஜ் பவுண்டேசன் சார்பில் நிகழ்ச்சி ஒன்று நிகழ்ந்தது. இதில் பிரபல இயக்குனரான கிறிஸ்டோபர் நோலன் கலந்து கொண்டு படம்பிடிக்கும் முறையை பற்றி உரையாடினார். இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன், தனது மனைவி எமா தாமஸ் மற்றும் அவரது குழந்தைகளுடன் மும்பை வந்துள்ளார்.
இயக்குனரான இவர் தன்னுடைய படங்கள் உலகம் முழுவதும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் சினிமா துறையில் பல ஆஸ்கர் விருதுகளை ஒவ்வொரு ஆண்டும் வென்று வருகிறார். இவருடைய இயக்கத்தில் இறுதியாக வெளியான "டன்கிர்க்" படம் இந்த ஆண்டின் மூன்று ஆஸ்கர் விருதுகளை தட்டி சென்றது. இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இந்தியா வருகை தந்து சினிமா பிரபலங்களை சந்திக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது.
அதன்படி தற்போது நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், நேற்று நோலனை சந்திக்க மும்பை சென்று அவரை சந்தித்து பேசியுள்ளார். இது குறித்து கமல்ஹாசன் தனது டிவிட்டரில் "மிஸ்டர் கிறிஸ்டோபர் நோலனை சந்தித்தேன். அவருடைய 'டன்கிர்க்' படத்தை தியேட்டரில் பார்க்க முடியாமல் போனதற்கு மன்னிப்பு கேட்டேன். இதற்கு பதில் 'ஹே ராம்' படத்தின் டிஜிட்டல் நகலை அவருக்கு வழங்கினேன். அவர் 'பாபநாசம்' படத்தை பார்த்ததாக இன்ப அதிர்ச்சி கொடுத்தார்" என்று கமல் தனது டிவிட்டரில் மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.
Met Mr.Christopher Nolan. Apologized for seeing Dunkirk in the digital format and in return am sending Hey Ram in digital format for him to see. Was surprised to know he had seen Paapanaasam. 😊 pic.twitter.com/iTPgQOZCMH
— Kamal Haasan (@ikamalhaasan) March 30, 2018