இந்திய திரை பிரபலங்களை சந்திக்க உள்ள உலக புகழ்பெற்ற இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன்

       பதிவு : Mar 22, 2018 17:47 IST    
இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் வரும் 29-ஆம் தேதி மும்பைக்கு வந்து இந்திய திரை நட்சத்திரங்களை சந்திக்க உள்ளார். இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் வரும் 29-ஆம் தேதி மும்பைக்கு வந்து இந்திய திரை நட்சத்திரங்களை சந்திக்க உள்ளார்.

உலகம் முழுவதும் வசூல் சாதனை குவிக்கும் படங்களில் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலனின் படங்களும் அடங்கும். இவருடைய இயக்கத்தில் வெளிவந்த படங்கள் அனைத்தும் உலகம் முழுவதும் மிகுந்த வரவேற்பையும் பிரமாண்ட வசூல் சாதனையும் படைத்துள்ளது. இவருடைய இயக்கத்தில் இறுதியாக கடந்த ஆண்டு வெளியான படம் 'டன்கிர்க் (Dunkirk)'. சிறந்த கதைக்களத்துடன் வெளியான இந்த படம் 2018 ஆண்டின் மூன்று ஆஸ்கர் விருதுகளை குவித்து சாதனை படைத்தது.

இந்த படம் சிறந்த இயக்குனர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் போன்ற 8 ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதில் சிறந்த பிலிம் எடிட்டிங், சவுண்ட் மிக்சிங், சவுண்ட் எடிட்டிங் போன்ற விருதுகளை தட்டி சென்றது. இவருடைய இயக்கத்தில் வெளிவந்த தி டார்க் நைக்ட், இன்சப்ஷன், இன்டெர்ஸ்டெல்லர் போன்ற படங்கள் உலகம் முழுவதும் மொழிபெயர்க்க படுவதால் இவருடைய படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைக்கும்.

 

இதே போல் இந்தியாவிலும் இவருடைய படங்கள் வெளியாகி வசூலிலும், விமர்சனங்கள் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இவர் வரும் மார்ச் 29-ஆம் தேதி மும்பைக்கு வரவுள்ளார். அங்கு அவர் ஏப்ரல் 1-ஆம் தேதி வரை தங்கி தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்கிறார்.

இதனை அடுத்து ஏப்ரல் 31-ஆம் தேதி இந்திய திரை பிரபலன்களான அமிதாப் பச்சன், ஆமிர் கான், கமல் ஹாசன், இயக்குனர் மணிரத்னம் ஆகியோரை சந்திக்க உள்ளார். இந்த செய்தியறிந்து ரசிகர்கள் கிறிஸ்டோபர் நோலன் வருகைக்காக ஆவலுடன் உள்ளனர். மேலும் தற்போது சமூக வலைத்தளங்களில் கிறிஸ்டோபர் நோலனின் அடுத்த படத்தில் கமல் ஹாசன் நடிக்க உள்ளதாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகிறது. 

 


இந்திய திரை பிரபலங்களை சந்திக்க உள்ள உலக புகழ்பெற்ற இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன்


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்