ads

முன்னாள் காவல்துறை அதிகாரிகள் பொதுநல அறக்கட்டளைக்கு கார்த்தி 10 லட்சம் நன்கொடை

காவல் துறை அதிகாரிகளுக்கு நலத்திட்ட உதவிகளை செய்திட முன்னாள் காவல் அதிகாரிகளின் அறக்கட்டளைக்கு 10 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளார்.

காவல் துறை அதிகாரிகளுக்கு நலத்திட்ட உதவிகளை செய்திட முன்னாள் காவல் அதிகாரிகளின் அறக்கட்டளைக்கு 10 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளார்.

'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் கார்த்தி தற்போது 'கடைக்குட்டி சிங்கம்' படத்தில் நடித்து வருகிறார். விவசாயம் சார்ந்த படமாக உருவாகி வரும் இந்த படத்தில் கார்த்தி 5 அக்காளுக்கு கடைக்குட்டி தம்பியாக நடித்து வருகிறார். இந்த படத்தை நடிகர் சூர்யா தயாரித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள் இணைந்து உருவாகியுள்ள அறக்கட்டளையின் துவக்கவிழாவில் நடிகர் கார்த்தி கலந்து கொண்டுள்ளார். இந்த அறக்கட்டளைக்காக 10 லட்சத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார். இந்த விழா நேற்று நிகழ்ந்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு நடிகர் கார்த்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது "என்னுடைய தீரன் அதிகாரம் ஒன்று படத்திற்கு பிறகு மக்களின் பாதுகாவலரான காவல் அதிகாரிகளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தேன்.

வாழ்க்கையில் தவறுகள் மட்டும் நடக்கும் இந்த சமூகத்தில் நேர்மையாக இருப்பது மிகவும் கடினமான ஒன்று. நேர்மையான அதிகாரியாக படத்தில் நடித்ததே எனக்கு கடினமாக இருந்தது. பகல் இரவு முழுவதும் தூங்காமல் நமக்காக வேலைபார்க்கும் அவர்களுக்காக நலத்திட்ட உதவிகளை செய்ய அறக்கட்டளைகள் வேண்டும். அப்படியொரு அறக்கட்டளையை துவங்கியுள்ளோம்.

தமிழக அரசு, காவல் அதிகாரிகளின் மனச்சுமையை குறைக்க வழிவகை செய்ய வேண்டும் என்பது எனது கோரிக்கை." என்று அவர் தெரிவித்துள்ளார்.

நேர்மையான அதிகாரியாக இருப்பது மிகவும் கடினம் - கார்த்தி நேர்மையான அதிகாரியாக இருப்பது மிகவும் கடினம் - கார்த்தி

முன்னாள் காவல்துறை அதிகாரிகள் பொதுநல அறக்கட்டளைக்கு கார்த்தி 10 லட்சம் நன்கொடை