ads

கடைக்குட்டி சிங்கம் படத்தின் புதிய தகவல்

karthi kadai kutty singam new updates

karthi kadai kutty singam new updates

கார்த்தி நடிப்பில்  கடந்த ஆண்டு வெளிவந்த 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்பொழுது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இவர் கடந்த 2009ல் வெளிவந்த 'பசங்க' படத்தின் மூலம் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானார். மேலும் இப்படத்தின் மூலம் சிறந்த தமிழ்த் திரைப்படம், திரைக்கதைக்காக தேசிய விருது  மற்றும் இந்த ஆண்டின் சிறந்த கண்டுபிடிப்பு விஜய் விருது, சிறந்த பாத்திரமைப்பு விஜய் விருது போன்ற பல விருதுகளை பெற்றுள்ளார். மேலும் இவர் இயக்கத்தில் வம்சம், மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, இது நம்ம ஆளு, கதகளி  போன்ற வெற்றி படங்களை ரசிகர்களுக்கு கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

'2டி என்டர்டெய்ன்மெண்ட்' தயாரிப்பு நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா தயாரித்து வரும் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தில் கார்த்தி ஜோடியாக பிரியா பவானி சங்கர் மற்றும் சாயிஷா செய்கல்  என இரு நாயகிகள் இணைந்துள்ளார். இவர்களுடன் சத்யராஜ், காமெடி நடிகர் சூரி முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தில் சூரிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் காமெடிகளுக்கும் அதிகளவு கவனம் செலுத்தி வருகிறாராம் இயக்குனர் பாண்டிராஜ். மேலும் படத்தின் தலைப்பினை போன்று கார்த்தி குடும்பத்தின் கடைசி பையனாம். இதன் காரணத்தினால் படத்திற்கு 'கடைக்குட்டி சிங்கம்' என்று தலைப்பினை வைத்துள்ளனர்.

இப்படத்தில் கார்த்திக்கு ஐந்து அக்கா இருப்பது போன்று கதாபாத்திரமும் இடம் பெற்றுள்ளது. காமெடி கலந்த அக்கா தம்பி பாசத்தினை மையமாக கொண்டு இயக்குனர் பாண்டிராஜ் உருவாகி வருகிறாராம். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்  கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது.

கடைக்குட்டி சிங்கம் படத்தின் புதிய தகவல்