வரலட்சுமி படத்தில் வில்லனாக இணைந்த நெய்ல் நித்தின்

       பதிவு : Mar 24, 2018 14:26 IST    
நடிகை வரலட்சுமியின் சக்தி படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் கத்தி மற்றும் சாஹு படத்தின் வில்லன் நெய்ல் நிதின் நடிக்க உள்ளார். நடிகை வரலட்சுமியின் சக்தி படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் கத்தி மற்றும் சாஹு படத்தின் வில்லன் நெய்ல் நிதின் நடிக்க உள்ளார்.

நடிகை வரலட்சுமி நடிப்பில் இறுதியாக 'சத்யா' படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு சிறந்த வில்லன் விருது வரலட்சுமிக்கு கிடைத்தது. இதனை தொடர்ந்து நடிகை வரலட்சுமி தளபதி 62, மாரி 2, சண்டக்கோழி 2, மிஸ்டர் சந்திரமௌலி, கன்னி ராசி, எச்சரிக்கை, நீயா 2, அம்மாயி, சக்தி மற்றும் வரலட்சுமியின் தந்தையான சரத்குமாரின் 'பாம்பன்' படத்திலும் நடித்து வருகிறார். இப்படி பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார் வரலட்சுமி.

இதில் வரலட்சுமி 'சக்தி ' என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் மிஷ்கினின் உதவி இயக்குனரான பிரியதர்சினி இயக்க உள்ளார். இதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியானது. இதனை அடுத்து இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டது. இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரமான வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க முன்னணி நடிகர்களை ஆலோசித்து வந்தனர்.

 

இந்நிலையில் தற்போது கத்தி படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் நெய்ல் நித்தின் வில்லன் கதாபாத்திரத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து இயக்குனர் பிரியதர்சினி "கத்தி படத்தில் நெய்ல் நித்தின் நடிப்பு சிறப்பாக இருந்தது. இதனால் இந்த படத்திற்கு மிகவும் பொருத்தமாக இருப்பார் என முடிவு செய்தோம். அவரிடம் மும்பையில் இரண்டு மணி நேரம் இந்த படத்தின் கதையை சொன்னேன். இந்த படத்தில் முதல் மற்றும் இரண்டாம் பகுதிகள் முற்றிலும் மாறுபட்டு இருக்கும்.

இரண்டாம் பகுதியில் இந்த படத்தின் வில்லன் கதாபாத்திரம் மிகவும் வலுவானதாக இருக்கும். இந்த படத்தின் கதையை கேட்ட பிறகு நித்தினுக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனே நடிக்க ஒப்பு கொண்டார். இவருடைய கதாபாத்திரம் மிகவும் ஜாலியான, அறிவுபூர்வமான, ஆபத்தான கதாபாத்திரம். இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் வரலட்சுமியும், வில்லனான நித்தினும் பூனை எலி இரண்டுக்கும் இடையிலான ஆக்சன் காட்சிகளை போன்று இருக்கும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

நடிகர் நெய்ல் நித்தின் சம்பந்தப்பட்ட காட்சிகள் வரும் மே 15-ஆம் தேதி முதல் எடுக்கப்பட உள்ளது. நித்தின் தற்போது 'சாஹா ' படத்தில் பிரபாஸுக்கு எதிரான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு முடிந்த பிறகு 'சக்தி' படத்தில் இணையவுள்ளார்.


வரலட்சுமி படத்தில் வில்லனாக இணைந்த நெய்ல் நித்தின்


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்